வீடு திரும்பிய பவர்ஸ்டார்: 4 நாட்கள் நடந்தது என்ன, போலீசிடம் உண்மையை சொன்னார்

By Siva

Recommended Video

திடீரென்று வீடு திரும்பிய பவர்ஸ்டார்.. உண்மையில் அவர் கடத்தப்பட்டாரா?- வீடியோ

சென்னை: பவர்ஸ்டார் சீனிவாசன் தான் தெரிவித்தபடியே தானாக வந்து சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.

சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார் நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன். நண்பரை பார்க்கச் சென்ற பவர்ஸ்டாரை கடந்த 5ம் தேதி மாலையில் இருந்து காணவில்லை என்று அவரின் மனைவி ஜூலி போலீசில் புகார் அளித்தார்.

அவரது புகாரின்பேரில் போலீசார் பவர்ஸ்டாரை தேடினார்கள். அவரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

விசாரணை

விசாரணை

பவர்ஸ்டாரின் செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்ததை அடுத்து அவர் கடத்தப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில் அவரின் செல்போனை மீண்டும் கொடர்பு கொண்டபோது அவரே எடுத்து பேசினார். தேனியை சேர்ந்த நண்பர் ஒருவரிடம் பணம் வாங்கிவிட்டு அதை திருப்பிக் கொடுக்க முடியாததால் ஊட்டியில் உள்ள நிலத்தை விற்க முடிவு செய்ததாக பவர்ஸ்டார் போலீசாரிடம் தெரிவித்தார்.

நிலம்

நிலம்

ஊட்டியில் உள்ள நிலத்தை விற்று நண்பருக்கு பணம் கொடுக்க முடிவு செய்தேன். அதனால் நிலத்தை விற்க ஊட்டிக்கு வந்தேன். இந்த வேலை முடிந்ததும் நானே ஊர் திரும்பிவிடுவேன் என்று பவர்ஸ்டார் நேற்று போலீசாரிடம் தெரிவித்தார். அவர் தெரிவித்தது போன்றே இன்று சென்னை திரும்பி அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.

பயம்

பயம்

பவர்ஸ்டார் நிலத்தை விற்க சென்றபோது மனைவி உள்பட யாரிடமும் கூறவில்லை. இது தெரியாத அவரின் மனைவி பவர்ஸ்டார் மாயமாகிவிட்டதாக புகார் தெரிவித்தார். பின்னர் பவர்ஸ்டார் ஜூலியை தொடர்பு கொண்டு ஊட்டிக்கு வருமாறு கூற அவர் போலீசாரிடம் தெரிவிக்காமல் சென்றுவிட்டார்.

கடத்தல்

கடத்தல்

அப்பாவையும், அம்மாவையும் யாரோ ஊட்டியில் அடைத்து வைத்திருப்பதாக பவர்ஸ்டாரின் மகள் தெரிவித்தார். உடல்நலம் பாதிக்கப்பட்ட தன் அம்மா மருத்துவமனைக்கு சென்றபோது யாரிடமோ செல்போனை வாங்கி தன்னிடம் பேசியதாகவும், தங்களின் போனை பறித்து வைத்துள்ளதாகவும் அவர் கூறினார். தன்னை யாருமே கடத்தவில்லை என்று பவர்ஸ்டார் கூறியுள்ள நிலையில் அவரின் மகள் அளித்த பேட்ட குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X