கிடா பூசாரி மகுடி... ஜானி ரஜினி கெட்டப்பில் பவர் ஸ்டார் சீனிவாசன்!

By Shankar

கிடா பூசாரி மகுடி என்ற படத்தில் ஜானி படத்தில் வரும் ரஜினியின் கெட்டப்பில் நடிக்கிறார் பவர் ஸ்டார் சீனிவாசன்.

தமிழ் திரை விருட்சகம் சார்பாக தமிழ்மணி தயாரிக்கும் புதிய படம் 'கிடா பூசாரி மகுடி'.

இதில் அறிமுக நாயகர்களாக தமிழ், ராம் தேவ் ஆகியோர் நடிக்கின்றனர். கேரளாவைச் சேர்ந்த நட்சத்திரா கதாநாயகியாக நடிக்கிறார்.

ஜெயக்குமார்

ஜெயக்குமார்

மேலும், சிங்கம் புலி, பவர் ஸ்டார் சீனிவாசன், பேராசிரியர் மு.ராமசாமி, செவ்வாளை ராசு, போண்டாமணி, கலைராணி, கம்பம் மீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜெ.ஜெயக்குமார்.

இவர் இயக்குனர்கள் வேலு பிரபாகரன், ராம் பிஸ்லானி, வியாசன் ஆகியோருடன் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இளையராஜா

இளையராஜா

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். படத்தின் 80 சதவீதம் படப்பிடிப்பை முடித்துவிட்டு, இசையமைப்பாளர் இளையராஜாவிடம் படத்தை போட்டுக் காண்பித்துள்ளனர் படக்குழுவினர். படத்தை பார்த்து முழு திருப்தியடைந்த பிறகே இப்படத்தில் இசையமைக்க இளையராஜா ஒத்துக் கொண்டுள்ளார்.

கிடா பூசாரி

கிடா பூசாரி

இப்படம் குறித்து இயக்குனர் ஜெயக்குமார் கூறுகையில், 'திருமணத்துக்கு முன் ஒரு ஆணும் பெண்ணும் பிடித்து வாழ்வது மட்டும் காதல் அல்ல. திருமணத்துக்கு பிறகு உருவாகும் ரத்த பந்தத்தில்தான் காதல் உள்ளது என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகும் படம்தான் ‘கிடா பூசாரி மகுடி'. நாயகன் பெயர் மகுடி. கிராமத்து குல தெய்வம் கோயிலில் கிடா வெட்டுவது அவர் வேலை.

பவர் ஸ்டார்

பவர் ஸ்டார்

இப்படத்தில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் ஜானி படத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த முடி திருத்துபவர் பாத்திரத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் ரஜினி நடித்திருந்த கெட்டப்பிலேயே நடிக்கிறார். ஆனால், ரஜினியை கிண்டல் செய்யும் விதமாக எந்தக் காட்சியும் வைக்கவில்லை," என்றார்.

என்ன சொன்னார் ராஜா?

என்ன சொன்னார் ராஜா?

படத்தைப் பார்த்த இளையராஜா என்ன சொன்னார் என்று கேட்டபோது, "எடுத்த வரைக்கும் நல்லாத்தான்யா இருக்கு... க்ளைமாக்ஸ் சரியா இருக்கட்டும் என்றார் ராஜா சார். பாடல் காட்சிகளில் ஒன்றில் மட்டும் திருத்தம் சொன்னார். அதன்படி மாற்றி எடுத்திருக்கிறேன்," என்றார் இயக்குநர் ஜெயக்குமார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X