வடசென்னை இமேஜை மாற்ற வரும் 'பொழுது போக்கு'

லிஜோ மூவிஸ் எனும் புதிய நிறுவனம் தயாரிக்கும் முதல் படைப்பு இந்தப் 'பொழுது போக்கு'.
வடசென்னையில் வாழும் நான்கு நல்ல இளைஞர்களின் கலகலப்பான எதார்த்தமான வாழ்க்கைதான் படத்தின் மையக்கரு.
முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தை, புதுமுக இயக்குநர் எ.சரவணகுமார் இயக்குகிறார்.
கே எஸ் கோபி கேமராவைக் கையாள, இசையமைப்பாளர் ஹார்மோனி இசையமைக்கிறார்.
வடசென்னை, தரமணி, புதுப்பேட்டை, சிந்தாதிரிப் பேட்டை மற்றும் கோவா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடக்கிறது. 5 பாடல்களில் மூன்று வெளிநாட்டில் படமாக்கப்படுகிறது.
தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்து, இன்று படப்பிடிப்பை ஏவிஎம்மில் தொடங்கியுள்ளனர் இந்த இளைஞர் குழுவினர்.


Click it and Unblock the Notifications











