மெகா பட்ஜெட், 3 மொழிகள்: பூஜையுடன் பிரமாண்டமாக துவங்கிய பிரபாஸ் படம் #prabhas20
ஹைதராபாத்: பிரபாஸின் அடுத்த படம் பூஜையுடன் இன்று துவங்கியது.
பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் சாஹோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடப்படுகிறது.

சாஹோ பட வேலைகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில் பிரபாஸின் அடுத்த படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டது. ஹைதராபாத்தில் நடந்த இந்த பூஜை நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜமவுலி கலந்து கொண்டார். இந்த படத்தை கே.கே. ராதாகிருஷ்ண குமார் இயக்குகிறார். சாஹோவை போன்றே இந்த படமும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடப்படும்.
காத்திருப்பு முடிந்தது. பிரபாஸ் 20 படத்திற்கு பூஜை போடாச்சு என்று ராதாகிருஷ்ண குமார் ட்விட்டரில் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். பிரபாஸ் 20 படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார்.
கோபி கிருஷ்ணா மூவீஸுடன் சேர்ந்து யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேசிய விருது வாங்கிய அமித் திரிவேதி இசையமைக்கிறார். மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் சயீரா நரசிம்ம ரெட்டி வரலாற்று படத்திற்கும் அமித் தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாஹோ படத்தில் தனது காட்சிகளை நடித்து முடித்த பிறகு பிரபாஸ் ராதாகிருஷ்ண குமாரின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார். பிரபாஸ், பூஜாவுடன் வரும் 20ம் தேதி ஐரோப்பாவுக்கு கிளம்ப திட்டமிட்டுள்ளதாக ராதாகிருஷ்ண குமார் தெரிவித்துள்ளார்.
பாகுபலி, பாகுபலி 2 படங்களுக்கு பிறகு பிரபாஸ் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார். அதனால் தான் அவரின் படங்கள் ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் எடுக்கப்படுகிறது . சாஹோவை போன்றே பிரபாஸ் 20 படமும் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறது.
புதுப்படம் குறித்து பிரபாஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Prabhas 20 movie has been launched today in Hyderabad. Movie director KK Radha Krishna Kumar tweeted that, 'Hi guys!! Wait ends here.. Have done the Pooja ceremony of #prabhas20 @UVKrishnamRaju gari office today morning. Produced by Gopi krishna movies and @UV_Creations. Shoot starts this 20th in Europe with @hegdepooja and our Darling Prabhas.'


Click it and Unblock the Notifications











