சூப்பர் அப்டேட்.. பிரபாஸ், நாக் அஸ்வின் படம் எப்போ ஸ்டார்ட் ஆகுது.. எப்போ ரிலீஸ் தெரியுமா?

ஹைதராபாத்: பாகுபலி நடிகர் பிரபாஸ் நடிப்பில் நடிகையர் திலகம் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள படம் குறித்த சூப்பரான அப்டேட் வெளியாகி இருக்கிறது.

சாஹோ படத்திற்கு பிறகு இயக்குநர் ராதா கிருஷ்ணன் இயக்கத்தில் பெயரிடாத படமொன்றில் நடித்து வருகிறார் பிரபாஸ்.

அந்த படத்தைத் தொடர்ந்து வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள 'பிரபாஸ் 21'வது படம் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர் அஸ்வினி தத் ரிவீல் செய்துள்ளார்.

மார்க்கெட் அதிகரிப்பு

மார்க்கெட் அதிகரிப்பு

இயக்குநர் ராஜமவுலியின் பிரம்மாண்ட படைப்புகளான பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் உலகளவில் நடிகர் பிரபாஸின் மார்க்கெட்டை சரசரவென உயர்த்தி இருக்கிறது. 300 கோடி பட்ஜெட்டில் சுஜீத் இயக்கத்தில் வெளியான சாஹோ படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து மேலும், பிரபாஸின் சம்பளத்தை அதிகரித்து இருக்கிறது.

தேசிய விருது

தேசிய விருது

அதேபோல இளம் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான நடிகையர் திலகம் படம் தேசிய விருதுகளை அள்ளிக் குவித்து இந்தியளவில் நாக் அஸ்வினை பிரபலப்படுத்தி இருக்கிறது. அடுத்ததாக அவர் யாரை வைத்து என்ன மாதிரியான படத்தை இயக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்புக்கு ஏற்றார்போல பிரபாஸை இயக்குகிறார்.

பிரம்மாண்ட கதை

பிரம்மாண்ட கதை

தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் தனது 50வது ஆண்டு பொன் விழாவை கொண்டாடும் வகையில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். டைம் மெஷின், சயின்ஸ் ஃபிக்‌ஷன் என பிரம்மாண்ட கதையாக அந்த படம் உருவாக உள்ளது.

சூப்பர் அப்டேட்

சூப்பர் அப்டேட்

இந்நிலையில், 'பிரபாஸ் 21' படம் குறித்த சூப்பர் அப்டேட்டை தயாரிப்பாளர் அஸ்வினி தத், சமீபத்தில் ஆன்லைன் போர்ட்டல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் ரிவீல் செய்திருக்கிறார். அதன்படி, வரும் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கி வரும் 2022ம் ஆண்டு அந்த படம் வெளியாகும் என தெரிகிறது.

புட்ட பொம்மா

புட்ட பொம்மா

இயக்குநர் ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ் தனது 20வது படத்தில் தற்போது நடித்து வருகிறார். புட்ட பொம்மா புகழ் பூஜா ஹெக்டே அந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். லாக்டவுனுக்கு முன்னதாக ஜார்ஜியா நாட்டில் அந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. எவ்வளவு சீக்கிரமாக இந்த லாக்டவுன் முடிவுக்கு வருகிறதோ, அதன் பின்னர் தான் பிரபாஸ் 20 மற்றும் 21 படங்களின் ஷூட்டிங் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: prabhas பிரபாஸ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X