600 கோடி சுமையை தாங்குவாரா பிரபாஸ்?.. இதுவரைக்கும் கல்கி ப்ரீ ரிலீஸ் வசூல் எத்தனை கோடி தெரியுமா?
சென்னை: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் 600 கோடி ரூபாய் என்கிற தகவல்கள் கசிந்துள்ளன. பல ஆண்டுகளாக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படம் வரும் ஜூன் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர் பிரபாஸ் தொடர்ந்து 500 கோடி, 600 கோடி பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். ஆனால் சமீபகாலமாக அவர் நடிக்கும் படங்கள் பெரிதாக ஓடாததால் தயாரிப்பாளருக்கு பயங்கர நஷ்டம் மட்டுமே ஏற்பட்டு வருவதாக கூறுகின்றனர்.

இந்நிலையில், கல்கி திரைப்படம் இதுவரை டிக்கெட் முன்பதிவில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது. 600 கோடி பட்ஜெட் பாரத்தை பிரபாஸ் தாங்குவாரா என்கிற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. கல்கி 2898 ஏடி திரைப்படம் எதிர்பார்த்ததைப் போல வெற்றி பெறவில்லை என்றால் நடிகர் பிரபாஸ் மிகப்பெரிய சிக்கலுக்கு ஆளாவார் என்றும் கூறுகின்றனர்.
பாகுபலியின் பிரமாண்ட வெற்றி: பாகுபலி இரண்டாம் பாகம் அதிகபட்சமாக 1800 கோடி ரூபாய் வசூல் வேட்டை நடத்திய நிலையில், பிரபாஸை வைத்து 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் எடுத்தாலும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் வந்து விடும் என இயக்குநர்களின் பேச்சை நம்பி தயாரிப்பாளர்கள் அதிக பொருட்செலவில் படங்களை தயாரித்து வெளியிட்டு வருகின்றனர். ஆனால், பாகுபலி இரண்டாம் பாகத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்த எந்த ஒரு படமும் 1000 கோடி ரூபாய் வசூலை தொடவில்லை என்பதுதான் நிதர்சனம். சலார் திரைப்படமே வெறும் 700 கோடி ரூபாய் தான் வசூல் செய்தது என்றும் அந்த படம் தயாரிப்பாளருக்கு லாபத்தை தரவில்லை என்றே கூறுகின்றனர். அதன் இரண்டாம் பாகம் வெளியானால் மட்டுமே லாபத்தைப் பார்க்க முடியும் என்றும் கூறுகின்றனர்.

600 கோடி பட்ஜெட்: பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி மற்றும் சோபனா உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக ஹாலிவுட் படங்களுக்கு நிகராக கல்கி 2898 ஏடி திரைப்படம் உருவாகியுள்ள நிலையில், அதன் ஒட்டுமொத்த பட்ஜெட் 600 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்தால் மட்டுமே பிரேக் ஈவன் ஆகும் என்றும் 1200 கோடிக்கு மேல் வசூல் வந்தால் தான் தயாரிப்பதற்கு லாபம் கிடைக்கும் என்றும் கூறுகின்றனர்.
ப்ரீ டிக்கெட் புக்கிங்: இதுவரை வெளிநாடுகளில் பிரபாஸ் படத்துக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு உள்ள நிலையில் ப்ரீ டிக்கெட் புக்கிங் வசூல் மட்டும் 25 மில்லியன் டாலர் வசூல் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய மதிப்பில் சுமார் 208 கோடி ரூபாய் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக முன்பதிவு மூலம் வசூல் வந்துள்ளதாக கூறுகின்றனர். படம் வெளியான பின்னர் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் வந்தால் தான் 600 கோடி பாரத்தை பிரபாஸால் தாங்க முடியும் என்றும் தெலுங்கை தவிர மற்ற மொழிகளில் இந்தப் படத்துக்கு பெரிதாக எதிர்பார்ப்பு இல்லை என்கிற நிலைதான் உருவாகி வருவதாக அதிர்ச்சியை கிளப்புகின்றனர். கமல்ஹாசன் நடித்தும் படத்தை இங்கே சரியாக புரமோட் செய்யாத நிலையில், விநியோகஸ்தர்கள் வாங்க தயங்குவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











