படு மோசமான விமர்சனம்.. ரூ.350 கோடியை நெருங்கும் ஆதிபுருஷ்.. அதிகாரப்பூர்வ வசூல் நிலவரம்!

சென்னை: ஆதிபுருஷ் திரைப்படத்தின் அதிகாரப்பூர் வசூல் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் நடிப்பில் கடந்த 16ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளிவந்த திரைப்படம் ஆதிபுருஷ்.

இராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை பிரபல இயக்குனர் ஓம் ரனாவத் இயக்கி உள்ளார்.

Prabhas adipurush movie will cross 350 crores

பிரபாஸ் : ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் ராமராகவும், கீர்த்தி சனோன் சீதாவாகவும், சயீப் அலி கான் ராவணனாகவும், சன்னி சிங் அனுமானாகவும் நடித்துள்ளனர். வாரிசு பட ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சன்சிட் பல்ஹாரா மற்றும் அன்கிட் பல்ஹாரா சகோதரர்கள் இசையமைத்திருக்கிறார்கள்.

முதல் நாள் வசூல் : 500 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவான இத்திரைப்படம் பெரிதும் எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியானது. ஆனால், படம் வெளியானதும் படு மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. மோசமான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், முதல் நாள் மட்டுமே ரூ. 140 கோடி வரை வசூல் செய்து பல சாதனைகளை முறியடித்துள்ளது.

தமிழில் வரவேற்பு இல்லை : 'ஆதிபுருஷ்' படத்தின் மிகப்பெரிய வசூல் தெலுங்கு மார்க்கெட்டில் இருந்தும், 58.5 கோடியும், இந்தியில் இருந்து 35 கோடியும் வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற மாநிலங்களில் கிடைத்த வரவேற்பில் பாதி கூட தமிழ்நாட்டில் ஆதிபுருஷ் படத்திற்கு கிடைக்கவில்லை.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இந்நிலையில் இப்படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வெளியான இரண்டு நாட்களில் ரூ.240 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் வெளியான முதல் நாளில் 140 கோடி ரூபாயும், அடுத்த நாளில் ரூ.100 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் அடுத்தடுத்த நாட்களில் ரூ. 340 கோடி வரை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நெகட்டிவ் விமர்சனங்களுக்கு மத்தியில் ஆதிபுருஷ் படம் வசூலை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X