பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தின் ஷூட்டிங் நிறைவு... எத்தனை நாட்கள் நடந்துச்சு தெரியுமா!

சென்னை: பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ஆதி புருஷ் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

நடிகர் பிரபாஸின் 22வது படமாக உருவாகி வரும் படம் ஆதி புருஷ். இயக்குநர் ஓம் ரவுத் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் நடிகர் பிரபாஸ் கடவுள் ராமராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை க்ரித்தி சனோன் ஜானகியாக நடிக்கிறார்.

103 நாட்கள் ஷூட்

103 நாட்கள் ஷூட்

இந்நிலையில் கடந்த 103 நாட்களாக நடைபெற்று வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பை படக்குழு இந்த ஆண்டு தொடக்கத்தில் மும்பையில் தொடங்கியது. இந்நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

க்ரித்தி சனோன் ஜோடி

க்ரித்தி சனோன் ஜோடி

தற்போது படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. பிரபாஸ் இயக்குநர் ஓம் ரவுத் மற்றும் க்ரித்தி சனோன் உடன் இருக்கும் படத்தை படக்குழு ஷேர் செய்துள்ளது. இந்தப் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

அற்புதமான பயணம் நிறைவு

அற்புதமான பயணம் நிறைவு

இதனிடையே படக்குழுவுடன் எடுத்துள்ள போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள ஓம் ரவுத், ஆதிபுருஷ் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது என்றும் ஒரு அற்புதமான பயணம் இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காத்திருக்க முடியாது

காத்திருக்க முடியாது

மேலும் நாங்கள் உருவாக்கியுள்ள மேஜிக்கை உங்களுடன் ஷேர் செய்ய காத்திருக்க முடியாது என்றும் பதிவிட்டுள்ளார். அவருடைய இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். புராண கதையாக உருவாகும் இந்தப் படத்தை டி சீரிஸ் பிலிம்ஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

படத்தில் நடித்தவர்கள்

படத்தில் நடித்தவர்கள்

கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கின்றார். இரட்டையர்களான சசேட்-பரம்பரா இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். சைஃப் அலி கான், சன்னி சிங், தேவதத்தா நாகே மற்றும் வத்சல் ஷெத் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X