ஏமிரா இது கோச்சடையான் தெலுங்கு வெர்சனா?… ஆதிபுருஷ் பிரபாஸை ட்ரோல் செய்யும் பொன்னியின் செல்வன்ஸ்

அயோத்தி: பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ஆதிபுருஷ்' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது..

ஓம் ராவுத் இயக்கியுள்ள ஆதிபுருஷ் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், ஆதிபுருஷ் படத்தின் டீசரை பொன்னியின் செல்வன் ரசிகர்கள் வச்சி செய்து வருகின்றனர்.

வெளியானது பிரபாஸின் ஆதிபுருஷ் டீசர்

வெளியானது பிரபாஸின் ஆதிபுருஷ் டீசர்

பிரபாஸ் தற்போது ஆதிபுருஷ் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஓம் ராவத் இயக்கியுள்ள 'ஆதிபுருஷ்' 2023ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி வெளியாகிறது. செப்டம்பர் 30ம் தேதி ஆதிபுருஷ் படத்தில் இருந்து பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு ரிலீஸ் செய்திருந்த நிலையில், தற்போது இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அயோத்தியில் இருந்து ஆதிபுருஷ் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. 500 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ஆதிபுருஷ் படத்துக்கு அதிகம் எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள டீசர், ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாகுபலியன்ஸை கலாய்க்கும் பொன்னியின் செல்வன்ஸ்

பாகுபலியன்ஸை கலாய்க்கும் பொன்னியின் செல்வன்ஸ்

பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. அதன் பிறகு பிரபாஸை பான் இந்தியா ஸ்டாராக கொண்டாடினர் டோலிவுட் ரசிகர்கள். இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தை, பாகுபலி ரசிகர்கள் ட்ரோல் செய்தனர். பொன்னியின் செல்வன் பாகுபலி அளவுக்கு இல்லை என்றும், மேக்கிங் சுமார் தான் எனவும் கிண்டலடித்திருந்தனர். ஆனால், இதுக்கெல்லாம் சேர்த்துவைத்து இப்போது ஆதிபுருஷ் டீசரை வச்சு பங்கம் செய்து வருகின்றனர் பொன்னியின் செல்வன் ரசிகர்கள்.

ஏமிரா இது கோச்சடையான் தெலுங்கு வெர்சனா?

ஏமிரா இது கோச்சடையான் தெலுங்கு வெர்சனா?

3டி ப்ளஸ் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் டீசர், பார்க்க பொம்மை படம் போல உருவாகியுள்ளது. இதனை பார்த்த பொன்னியின் செல்வன் ரசிகர்கள், "இது என்ன கோச்சடையான் பட தெலுங்கு வெர்சனா" என கிண்டல் செய்து வருகின்றனர். இன்னும் ஒரு ரசிகர் "டீசரை பார்த்துட்டு திருதிருன்னு முழிக்கும் ரசிகர்கள் சார்பாக பொம்மைப் படம் வெற்றிப் பெற வாழ்த்துகள்" என கமெண்ட் அடித்துள்ளார். அடுத்து ஒரு ரசிகர் இன்னும் கொஞ்சம் இறங்கி அடித்துள்ளார். அதாவது "சுட்டி டிவி ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என பங்கமாக கலாய்த்துள்ளார்.

பிரபாஸுக்கு ஆதிபுருஷும் அவுட் தானா?

பிரபாஸுக்கு ஆதிபுருஷும் அவுட் தானா?

ஆதிபுருஷ் டீசரை இன்னும் வறுத்தெடுத்து வருகின்றனர் பொன்னியின் செல்வன் ரசிகர்கள். தெலுங்கு ரசிகர்களால் டார்லிங் என கொண்டாடப்படும் பிரபாஸின் சாஹோ, ராதே ஷ்யாம் படங்களுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. பாகுபலிக்கு பிறகு பிரபாஸின் பான் இந்தியா படங்கள் மிகப் பெரிய தோல்வியடைந்த நிலையில், ஆதிபுருஷ் திரைப்படம் அவருக்கு கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், டீசரையே வச்சு செய்யும் நெட்டிசன்கள், படம் வெளியானதும் இன்னும் எப்படியெல்லாம் இறங்கி வெளுப்பார்கள் என தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X