வரிசை கட்டியுள்ள பிரபாஸின் திரைப்படங்கள்! .. படங்களின் நிலவரம் என்ன!?

சென்னை: தெலுங்கில் முன்னனி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் பிரபாஸ்.

பாகுபலி படத்திற்கு பிறகு தெலுங்கு மட்டுமன்றி தமிழிலும் பிரபாஸுக்கு ரசிகர்கள் பட்டாளம் வளர்ந்து வருகிறது.

பிரபாஸ் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவரவுள்ள படங்களின் மீது எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. அதனுடைய நிலவரம் குறித்த ஒரு தொகுப்பு.

2022 பொங்கல்

2022 பொங்கல்

ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ராதே ஷ்யாம். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த படம் வெளிவரவுள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. 2022 பொங்கலுக்கு வெளிவரும் என சொல்லப்படுகிறது.

30 சதவீதம்

30 சதவீதம்

கே.ஜி.எஃப் படங்களைத் தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் சலார். இந்த படமும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது. இந்த படத்தின் 30 சதவீத படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

ராமாயணக் கதை

ராமாயணக் கதை

ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், சைப் அலிகான், கிரித்தி சனோன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ஆதி புருஷ். ஆதி புருஷ் ராமாயணக் கதையை மையமாக கொண்ட படமாகும். இந்த படத்தின் 40சதவீத படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

படப்பிடிப்பு தொடக்கம்

படப்பிடிப்பு தொடக்கம்

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன் நடிப்பில் புதிய திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. குரு பூர்ணிமாவை முன்னிட்டு கடந்த ஜூலை 24ம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பை க்ளாப் அடித்து பிரபாஸ் தொடங்கி வைத்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X