Kalki 2898 AD box office prediction: பிரபாஸின் கல்கி முதல் நாள் வசூல் கணிப்பு.. அடித்து தூக்கிய வசூல்!

சென்னை: நாக் அஸ்வின் எழுதி இயக்கிய கல்கி 2898 AD திரைப்படம் மிகவும் எதிர்பார்ப்புக்குமத்தியில் இன்று வெளியாகி உள்ளது. பான் இந்திய திரைப்படமாக வெ தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ள இந்த படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் முதல் நாள் வசூல் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கல்கி படம் தொடங்கும் போதே குருசேத்திர போரில் அஸ்வத்தாமா அதாவது அமிதாப்பச்சன், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை கொல்ல பிரம்மாஸ்திரத்தை ஏவுகிறான். இதனால், ஆத்திரம் அடைந்த கிருஷ்ணர், அவனுக்கு சாகா வரத்தை கொடுத்து, அந்த குழந்தையாக தானே அவதரிப்பேன். அப்போது என்னை நீ காப்பாற்ற வேண்டும். அது வரை, இந்த பூமியில் நீ வேதனையோடு வாழ்வாய் என சாகவரத்தை சாபமாக கொடுக்கிறார். இதனால், அபிதாப் பச்சன்,கிருஷ்ணர் பிறப்பிற்காக காத்திருக்கிறார்.

Kalki 2898 AD Prabhas

கல்கி கதை: மகாபாரதப் போர் நடைபெற்று 6000 ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் கடைசி நகரம் என்று சொல்லப்படும் காசியில் கதை நடக்கிறது. அங்குள்ள மக்களை யாஸ்கின் என்ற கதாபாத்திரத்தில் நடித்த கமல்ஹாசன் ஆட்சி செய்கிறார். அந்த இடம் அந்தரத்தில் உள்ளது, அதன் பெயர் காம்ப்ளக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. அங்கு தான் சுத்தமான காற்று, தண்ணீர், உணவு போன்றவை கிடைக்கிறது. எனவே பிரபாஸ் இந்த இடத்திற்குள் நுழையவேண்டும் என்பதை வாழ்க்கை லட்சியமாக வைத்துள்ளார்.

அந்த அந்த காம்ப்ளக்ஸில் இருந்து கர்ப்பிணியான தீபிகா தப்பித்துவிட, அவள் வயிற்றில் இருக்கும் குழந்தை தான் கிருஷ்ணன் என்பது தெரியவருகிறது. அதையடுத்து அமிதாப் பல வருட சாபத்தில் இருந்து விடுபட தீபிகாவை தேடி வருகிறார். இதற்கு பிரபாஸ் எந்த விதத்தில் உதவுகிறார், அதோடு கமல் நினைத்ததை அடைந்தாரா என்ற பிரமாண்டமே இந்த கல்கி படத்தின் கதை.. ஆங்கிலப்படங்களுக்கு இணையான கிராபிக்ஸ் காட்சிகள் அசத்தலாக உள்ள இந்த படம் முதல் நாளே நல்ல ஓப்பனிங்கை கொடுத்து இருக்கிறது.

மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் உருவான இந்த படம், தமிழகத்தில் அட்வான்ஸ் புக்கிங்கில் ரூ3 கோடியை வசூலித்தது. மேலும் படம் வெளியாகி இன்று காலையில் இருந்தே படத்திற்கு நல்ல விமர்சனம் வந்து கொண்டு இருப்பதால், தமிழகத்தில் இப்படம் முதல் நாளில் 5 கோடிக்கு மேல் வசூல் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதால், இப்படம் உலக அளவில் முதல் நாளில் சுமார் ரூ. 200 கோடியை வசூலிக்கும் என்று கணிக்கப்படுகிறது.

More from Filmibeat

Read more about: kalki 2898 ad prabhas
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X