அட பாவிங்களா.. பிரபாஸ் - அனுஷ்காவுக்கு கல்யாணம் பண்ணி குழந்தையையே கையில கொடுத்துட்டீங்களே!

சென்னை: ஏஐ மூலம் கற்பனையாக எதை வேண்டுமானாலும் உருவாக்க முடியும் என்பதால் ரசிகர்கள் தங்கள் கற்பனை குதிரைகளை கண்டமேனிக்கு ஓடவிட்டு வருகின்றனர்.

பாகுபலி படத்தில் ஜோடியாக நடித்த போது பிரபாஸ் - அனுஷ்கா இருவரும் காதலித்து வருவதாக வதந்திகள் பரவிய நிலையில், தற்போது அவர்களுக்கு திருமணமாகி போனஸாக குழந்தையையும் ஏஐ மூலமே ரசிகர்கள் கொடுத்துள்ளனர்.

Prabhas and Anushka Shetty married and had kids AI created photos trending

திருமணம் ஆகவில்லை: நடிகர் பிரபாஸுக்கும், நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கும் இதுவரை திருமணமே ஆகவில்லை. ஆனால், இருவரும் காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்து கொண்டால் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் தொடர்ந்து விரும்பி வருகின்றனர். அதன் உச்சபட்சமாக தற்போது ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கி உள்ள புகைப்படங்கள் ரசிகர்களை மலைக்க செய்துள்ளன.

Prabhas and Anushka Shetty married and had kids AI created photos trending

மணக்கோலத்தில் பிரபாஸ் - அனுஷ்கா: இருவரும் இன்னமும் திருமணம் செய்யாத நிலையில், அந்த காதல் வதந்தி இன்னமும் வலுவாகவே புகைந்து வருகிறது. இந்நிலையில், இருவரையும் மணக்கோலத்தில் அமர்த்தி ஏஐ போட்டோக்கள் மூலம் சில ரசிகர்கள் அழகு பார்த்துள்ளனர்.

கையில் குழந்தை: மேலும், கற்பனையின் உச்சத்துக்கே சென்ற ரசிகர்கள் நடிகர் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா கைகளில் பெண் குழந்தை ஒன்றையும் கொடுத்து கல்யாணம் பண்ணி, கர்ப்பமாக்கி அப்பா - அம்மாவாகவே மாற்றி உள்ளனர். அந்த புகைப்படங்கள் இந்தியா முழுவதும் டிரெண்டாகி வருகின்றன.

Prabhas and Anushka Shetty married and had kids AI created photos trending

ரொம்ப தப்பு: சினிமாவை போலவே ஏஐ மேஜிக்கும் இருந்தாலும், மற்றவர்கள் பர்சனல் விஷயங்களில் இப்படி போலியாக ஏஐ போட்டோக்களை உருவாக்கி வரும் நிலையில், பல விபரீதமான விளைவுகளும் ஏற்படும் என்றும் சிலருக்கு மன சங்கடம் உருவாகவும் கூடும் என்பதால் இது போல செய்யாதீங்க என்றும் நியூட்ரல் ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர்.

Prabhas and Anushka Shetty married and had kids AI created photos trending

தொழில்நுட்ப வளர்ச்சி: நாளுக்கு நாள் உருவாகி வரும் தொழில்நுட்ப வளர்ச்சியை தவிர்க்க முடியவில்லை என்றாலும், பல பேரின் வேலையை இந்த ஏஐ பறித்து விடும் அபாயத்தை உணராமல் தற்போது இதில் விளையாடி வருகின்றனர் என்றும் நிறைய ஓவியக் கலைஞர்களின் சோலியையே முடித்து வரும் ஏஐ எல்லா துறைகளிலும் சீக்கிரமே நுழைந்து உங்கள் வேலைக்கும் வேட்டு வைக்கும் என்பதை மறந்து விடாதீர்கள் என்கிற எச்சரிக்கை மணிகளும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X