Kalki Review: 5 நிமிஷம் வந்தாலும் கமல் கலக்கல்.. குருக்‌ஷேத்ர போர் மாஸ்.. கல்கி மக்கள் விமர்சனம்!

சென்னை: கல்கி 2898 ஏடி படம் இன்று உலகம் முழுவதும் வெளியான நிலையில், அந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஸ்டார் வார்ஸ், டூன் என ஹாலிவுட் படங்களின் காப்பி என கலாய்க்கப்பட்டு வந்த நிலையில், தியேட்டருக்கு வந்த ரசிகர்களுக்கு வேறலெவல் விஷுவல் ட்ரீட் கொடுத்து மெய் சிலிர்க்க வைத்திருக்கிறார் நாக் அஸ்வின் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

கல்கி 2898 ஏடி படத்தின் முதல் பாதி ஸ்லோவாக செல்வதாக விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. ஆனால், அந்த படத்திற்கான கதையை செட் செய்யத்தான் அந்த நேரத்தை நாக் அஸ்வின் எடுத்துக் கொண்டார் என்றும் இரண்டாம் பாதி கதை மகாபாரதத்துக்குள் சென்று மிரட்டி விட்டது என்கின்றனர்.

Review Kalki

கமல்ஹாசன் இந்த படத்தில் மொத்தமே 5 நிமிஷம் தான் வருகிறார் என்றும் சுப்ரீம் யஷ்கினாக அவர் வரும் காட்சிகள் அட்டகாசமாக இருப்பதாகவும் 2ம் பாகத்தில் தான் கமல்ஹாசனுக்கு அதிக சீன்கள் இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

கல்கி மக்கள் விமர்சனம்: கல்கி படத்தை காலையிலேயே தியேட்டருக்கு சென்று பார்த்த ரசிகர்கள் அந்த படம் சாலா பாகுந்தியாக இருக்கிறது என்றும் பிளாக்பஸ்டர் என்றும் சொல்லி வருகின்றனர். தமிழ்நாட்டை தவிர்த்து பிற மாநிலங்களில் அதிகாலை காட்சியை பார்த்த ரசிகர்கள் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களையே கொடுத்து வருகின்றனர். எந்தவொரு இடத்திலும் இயக்குநர் நாக் அஸ்வின் சொதப்பவில்லை என்றும் சிஜி காட்சிகள் எல்லாம் தரமாக உள்ளதாகவும் கூறுகின்றனர்.

Review Kalki

பிரபாஸ் பிரமாதம்: கல்கி படத்தில் பைரவா கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். அவர் வரும் காட்சிகள் எல்லாமே நகைச்சுவையாகவும் அதிரடியாகவும் வடிவமைத்து இருப்பது ரசிகர்களுக்கு தியேட்டரில் நல்ல ட்ரீட் என ரசிகர்கள் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். மாஸ் ஆக்‌ஷன் காட்சிகளில் பிரபாஸ் பைரவாவாக வருவதும் குருக்‌ஷேத்ர போரில் அர்ஜுனராக பிரபாஸை காட்டும் போது செம கூஸ்பம்ப்ஸ் ஆகிறது என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

Review Kalki

அமிதாப் பச்சன் அசத்தல்: கமல்ஹாசன், பிரபாஸை தாண்டி படத்தில் அமிதாப் பச்சன் அஸ்வத்தாம்மா கதாபாத்திரத்தில் அதிர விடுகிறார். 82 வயதிலும் மனுஷன் என்னம்மா ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து தூள் கிளப்புகிறார் என ரசிகர்கள் கல்கி 2898 ஏடி படத்தை கொண்டாடி வருகின்றனர். கேமியோ ரோலில் வரும் நடிகர்கள் வரும் காட்சிகள் எல்லாமே தியேட்டரில் விசில் பறக்கிறது. தீபிகா படுகோனுக்கு மிகப்பெரிய வெயிட்டான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் கல்கி படத்துக்கு விமர்சனத்தை கொடுத்துள்ளனர்.

Review Kalki

அடுத்த பார்ட்டுக்கு வெயிட்டிங்: கல்கி 2898 ஏடி திரைப்படம் முதல் பாகம் மட்டுமே என்றும் 2ம் பாகத்தில் தான் தரமான சம்பவங்கள் காத்திருப்பதாக ரசிகர்கள் அடுத்த பாகத்திற்காக காத்திருப்பதாக கூறுகின்றனர். பாகுபலி படத்தை விட இந்த படம் கதை ரீதியாகவும் மேக்கிங் ரீதியாகவும் மிரட்டுவதாக பிரபாஸ் ரசிகர்கள் படத்திற்கு ஃபுல் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

200 கோடி வசூல் செய்யுமா?: முதல் நாளிலேயே பிரபாஸ் நடித்துள்ள கல்கி திரைப்படம் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக மற்ற பகுதிகளிலும் படத்தை பார்க்க ரசிகர்கள் படையெடுப்பார்கள் என தெரிகிறது.

More from Filmibeat

Read more about: review kalki கல்கி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X