எத்தனை நாளைக்கு தான் முரட்டு சிங்கிளாகவே இருப்பது..இந்தி நடிகையுடன் டேட்டிங் செல்லும் பிரபாஸ்!
சென்னை : எத்தனை வருஷமா முரட்டு சிங்கிளாகவே இருந்த பாகுபலி புகழ் பிரபாஸ், இந்தி பட நடிகையுடன் டேட்டிங் செல்வதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
பாகுபலி படத்திற்குப் பிறகு, தென்னிந்தியாவை மட்டுமல்ல உலகம் முழுவதும் தன்னை திரும்பிபார்க்க வைத்தவர் நடிகர் பிரபாஸ்.
நடிகர் பிரபாஸ், பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் சலார், ப்ராஜெக்ட் கே, ஆதிபுருஷ் ஆகிய படங்களை கைவசம் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்

நடிகர் பிரபாஸ்
அசத்தியமான நடிப்பு, பிரம்மிப்பில் ஆழ்த்திய சண்டை காட்சி, துணிச்சல், அழகு என அனைத்தையும் பாகுபலி படத்தில் கனகச்சிதமாக வெளிப்படுத்தி இருந்தார் பிரபாஸ். இந்த படம் வெளியான போது சுமார் 6 ஆயிரம் பெண்கள், நான் நீ என போட்டி போட்டுக்கொண்டு பிரபாசை திருமணம் செய்து கொள்ள காத்திருந்தனர். ஆனால், அனைத்து பெண்களின் கோரிக்கையும் பிரபாஸ் நிராகரித்துவிட்டு 42 வயதிலும் முரட்டு சிங்கிளாகவே இருந்தார்.

அனுஷ்கா ஷெட்டியுன் கிசுகிசு
அதுமட்டுமில்லாமல், பாகுபலி படத்தில் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஷெட்டி கேமிஸ்டிரி பக்காவாக ஒர்க் அவுட்டாகி இருந்தது. அந்த நேரத்தில் இவர்கள் இருவரும் காதலிப்பதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. அதேபோல, சாஹோ படத்திலும் அனுஷ்காவின் பெயரை பிரபாஸ் சிபாரிசு செய்திருந்தார். அனுஷ்கா, அப்போது குண்டாக இருந்ததால் அந்த படவாய்ப்பு நடிகை ஷ்ரத்தா கபூருக்கு சென்றது.

ஆதிபுருஷ்
சினிமா வட்டாரத்தில் அனைவரும் எப்போது திருமணம் என கேட்டு வந்த நிலையில், திருமணம் குறித்து பிரபாஸ் வாய்திறக்காமல் இருந்தார். தற்போது பிரபாஸ் பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகி வரும் ஆதிபுருஷ் படத்தில் நடித்து வருகின்றனர். ராமாயண இதிகாசத்தை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்த படத்தில் பிரபாஸ் ராமராக நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக க்ரித்தி சனோன் வருகிறார்.

பிரபாஸ் டேட்டிங்
இந்நிலையில், இந்தி நடிகை க்ரித்தி சனோன் உடன் நெருங்கி பழகி வருவதாக கூறப்படுகிறது. அவருடன் பிரபாஸ் டேட்டிங் செல்வதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட க்ரித்தி சனோன் நடிகர் பிரபாஸுக்கு போனில் தொடர்பு கொண்டது தான் இந்த கிசுகிசுக்கு மூல காரணமாக அமைந்து விட்டது. இந்த தகவலை கேள்விபட்ட ரசிகர்கள் எத்தனை நாளைக்குத்தான் முரட்டு சிங்குளாவே இருப்பீங்கா பிரபாஸ் சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க என்று கருத்துக்களை கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











