twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராஜமெளலி இல்லைன்னா பிரபாஸ் ஒண்ணுமே இல்லையா? ராதே ஷ்யாம் கப்பல் கரை சேர்ந்ததா? கவிழ்ந்ததா?

    |

    சென்னை: இந்தியாவின் டைட்டானிக் என்கிற ரேஞ்சுக்கு படு பில்டப் உடன் இன்று வெளியானது பிரபாஸின் ராதே ஷ்யாம்.

    சென்னையில் நடந்த பட விழாவில் சத்யராஜ், இந்த படத்தில் கப்பலே பறக்கிறது என்றும் ஜேம்ஸ் கேமரூன் தான் நிகழ்ச்சிக்கு வந்திருக்கணும் என்றெல்லாம் பிரபாஸுக்கு பில்டப் கொடுத்திருந்தார்.

    இந்நிலையில், ராதே ஷ்யாம் திரைப்படம் எனும் கப்பல் கரை சேர்ந்ததா? இல்லை கவிழ்ந்ததா? என ட்விட்டர் வாசிகள் அளித்துள்ள விமர்சனங்களை இங்கே பார்ப்போம்..

    விஜய்யின் 'பீஸ்ட்’ படம்... ஆடியோ வெளியீட்டுக்கு ரெடியா...எப்போ ரிலீஸ் தெரியுமா?விஜய்யின் 'பீஸ்ட்’ படம்... ஆடியோ வெளியீட்டுக்கு ரெடியா...எப்போ ரிலீஸ் தெரியுமா?

    பிரபாஸ் படம்

    பிரபாஸ் படம்

    இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் மூலம் பான் இந்தியா நடிகராக வளர்ந்தார் பிரபாஸ். பாகுபலியை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான சாஹோ திரைப்படம் மிகப்பெரிய சொதப்பல் படமாக மாறியது. இந்நிலையில், ராதே ஷ்யாம் திரைப்படம் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் பிரம்மாண்ட காதல் கதையாக உருவாகி உள்ள நிலையில், இன்று தியேட்டர்களில் அந்த படம் வெளியாகி இருக்கிறது.

    கவிதை மாதிரி இருக்கு

    கவிதை மாதிரி இருக்கு

    பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே சந்தித்துக் கொள்ளும் ராதே ஷ்யாம் படத்தின் முதல் காட்சி திரையில் ஒரு கவிதை மாதிரி இருக்கு.. இதுவரை இந்திய படங்களில் இப்படியொரு ஹீரோ மற்றும் ஹீரோயினின் முதல் சந்திப்பு காட்சி படமாக்கப்படவே இல்லை என இந்த ரசிகர் ராதே ஷ்யாமை புகழ்ந்து தள்ளி உள்ளார்.

    தேவை இல்லாத கப்பல் காட்சி

    தேவை இல்லாத கப்பல் காட்சி

    படத்தின் பட்ஜெட்டை அதிகரிக்க வேண்டுமே என்கிற நோக்கத்திலேயே அந்த பிரம்மாண்ட கப்பல் காட்சி படமாக்கப்பட்டு இருப்பதாகவும், படத்துக்கு அந்த காட்சி எந்த விதத்திலும் கை கொடுக்கவில்லை என்றும், மற்றபடி பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டேவின் காதல் காட்சிகள் அற்புதம் என இந்த ரசிகர் விமர்சித்துள்ளார். பிரபாஸ் ரொம்ப குண்டாகி விட்டாரே என சமீபத்தில் கவலைப்பட்ட ரசிகர்கள் எல்லாம், ராதே ஷ்யாம் படத்தில் செம ஃபிட்டாக இருக்கும் பிரபாஸை பார்த்து ஆச்சர்யமடைந்துள்ளனர்.

    குட் கிளைமேக்ஸ்

    குட் கிளைமேக்ஸ்

    பிரபாஸிடம் இருந்து இப்படியொரு காதல் படத்தை எதிர்பார்க்கவே இல்லை என்றும், ஒவ்வொரு விஷுவலிலும் இயக்குநர் பிரம்மாண்டத்தை காட்டி மிரட்டியிருக்கிறார். இன்டெர்வெல் வேற லெவல் என்றால், படத்தின் கிளைமேக்ஸ் நல்லாவே இருக்கு என ரசிகர்கள் பிரபாஸ் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

    நல்லா இருக்கு

    நல்லா இருக்கு

    சண்டைக் காட்சிகள் அதிகம் இல்லாமல், அலட்டிக் கொள்ளாத தனது நடிப்பால் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே சிறப்பான பர்ஃபார்மன்ஸை கொடுத்துள்ளனர். சில இடங்களில் படம் ஸ்லோவாக சென்றாலும், ஒட்டுமொத்தமாக இது ஒரு நல்ல படம் என்றே பாசிட்டிவ் ஆன விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

    தூங்கிட்டேன்

    தூங்கிட்டேன்

    சாஹோ படத்தை விட 20 மடங்கு இந்த படம் பரவாயில்லை என்றும், வேஸ்ட் ஆஃப் டைம், வேஸ்ட் ஆஃப் மணி என்றும் நெகட்டிவ் விமர்சனங்களும் கிளம்பி வருகின்றன. படத்தை பார்க்கவே முடியவில்லை தூங்கிவிட்டேன் என்றும் பங்கம் செய்துள்ளனர். பிரபாஸுக்கும் பூஜா ஹெக்டேவுக்கும் கெமிஸ்ட்ரியே ஒட்டாமல் ஒரு காதல் படத்தை இவ்வளவு செலவு செய்து எடுத்து என்ன பயன் என்று கேட்டுள்ளனர்.

    சலார் கைகொடுத்தால் தான்

    சலார் கைகொடுத்தால் தான்

    ராஜமெளலியை தாண்டி பிரபாஸ் நடிக்கும் படங்கள் பெரிய ஹிட் ஆகாத நிலையில், கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படம் மற்றும் ஆதிபுருஷ் உள்ளிட்ட படங்கள் கைகொடுத்தால் தான் மீண்டும் பழைய பான் இந்தியா பிரபாஸை பார்க்க முடியும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். டோலிவுட்டை தவிர, கோலிவுட் மற்றும் பாலிவுட் வட்டாரங்களில் இந்த படத்திற்கு பெரிய ஓப்பனிங் கூட இல்லாதது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Prabhas’s Radhe Shyam Twitter Review is here. Netizens enjoyed the movie grand visuals and Prabhas acting. But slow screenplay is the big mistake for this movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X