For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பிரபாஸின் மிரட்டலான போஸ்டருடன் சலார் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு: தெறிக்கவிடும் ரசிகர்கள்!

  |

  ஐதராபாத்: 'கேஜிஎஃப்' படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார் இயக்குநர் பிரசாந்த் நீல்.

  அதேபோல், 'பாகுபலி' படத்திற்குப் பின்னர் பான் இந்தியா ஸ்டாராக ஜொலித்து வருகிறார் பிரபாஸ்.

  இவர்கள் இருவரது கூட்டணியில் உருவாகி வரும் 'சலார்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

  ரசிகர்களுக்காக சிம்பு செய்த காரியம்..இணையத்தில் கசிந்த தகவல்..பாராட்டும் ரசிகர்கள்!ரசிகர்களுக்காக சிம்பு செய்த காரியம்..இணையத்தில் கசிந்த தகவல்..பாராட்டும் ரசிகர்கள்!

  ராக்கி பாய்யின் ராஜ்ஜியம்

  ராக்கி பாய்யின் ராஜ்ஜியம்

  கேங்ஸ்டர் படங்களுக்கான பல மரபுகளை உடைத்தெறிந்ததோடு, இந்தியத் திரையுலகையே புரட்டிப் போட்டது ‘கேஜிஎஃப்' திரைப்படம். 'உக்ரம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரசாந்த் நீல், அடுத்ததாக ‘கேஜிஎஃப்' படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் ராக்கி பாய் என்ற ஒரு கேரக்டரை வைத்துக்கொண்டு அனைத்து மொழி ரசிகர்களையும் ரவுண்டு கட்டி மிரட்டினார் பிரசாந்த் நீல். இரண்டு பாகங்களாக வெளியான கேஜிஎஃப், இந்தியத் திரையிலகில் மிகப் பெரிய வசூல் வேட்டை நடத்தியது,

  வசூலில் மரண மாஸ்

  வசூலில் மரண மாஸ்

  ஹீரோவாக யாஷ், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதிஷெட்டி இவர்களுடன் மேலும் பலர் ‘கேஜிஎஃப்' படத்தில் நடித்திருந்தனர். கோலார் தங்கச் சுரங்கத்தின் பின்னணியில் கேங்ஸ்டர் படமாக உருவாகியிருந்தது. முழுக்க முழுக்க ஆக்சன் ஜானரில் அதகளம் பண்ண கேஜிஎஃப், செண்டிமெண்ட்டிலும் கண்ணீர்விட வைத்தது. ரவி பஸ்ரூரின் பாடல்கள், பின்னணி இசை, சினிமோட்டோகிராபி, எடிட்டிங் என டெக்னிக்கலாகவும் இந்தப் படம் மாஸ் காட்டியது.

  இரண்டாம் பாகம் செய்த சம்பவம்

  இரண்டாம் பாகம் செய்த சம்பவம்

  'கேஜிஎஃப்' படத்தின் முதல் பாகமே ரசிகர்களை மிரள வைத்த நிலையில், இரண்டாவது பாகமும் அதைவிட பிரமாண்டமாக வெளியானது. ரிப்பீட்டு மோடில் யாஷ் - பிரசாந்த் நீல் கூட்டணி கொடுத்த ஆக்சன் அதிரடியில், இரண்டாம் பாகமும் ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களின் லிஸ்ட்டில் இடம்பிடித்தது.. உலகம் முழுவதும் ஆயிரம் கோடிகளுக்கும் மேல் வசூலித்து பலரையும் வியக்க வைத்தது.

  பிரபாஸ் - பிரசாந்த் நீல் கூட்டணி

  பிரபாஸ் - பிரசாந்த் நீல் கூட்டணி

  'கேஜிஎஃப்' படத்தின் 3ம் பாகமும் விரைவில் உருவாகும் என தெரிகிறது. இந்நிலையில், பாகுபலி படத்திற்குப் பின்னர் பான் இந்தியா ஸ்டாராக கொண்டாடப்படும் பிரபாஸுடன் கூட்டணி வைத்துள்ளார் இயக்குநர் பிரசாந்த் நீல். ‘சலார்' என டைட்டிலில் உருவாகும் இந்தப் படம், ‘கேஜிஎஃப்'ஐ விட இன்னும் பிரமாண்டமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களையும் தயாரித்த ஹோம்பலே நிறுவனம் தான், சலார் படத்தையும் தயாரிக்கிறது.

  சலார் ரிலீஸ் அப்டேட்

  சலார் ரிலீஸ் அப்டேட்

  'சலார்' படம் குறித்து இதுவரை எந்த தகவல்களும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்தப் படம் 2023 செப்டம்பர் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பிரபாஸின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

  Recommended Video

  சத்யராஜ் என் செல்ல கட்டப்பா... பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபாஸ் ருசிகரம்
  மிரட்டலான போஸ்டர்

  மிரட்டலான போஸ்டர்

  அதுமட்டும் இல்லாமல் ஃபுல் ஆக்சன் மோடில் இருக்கும் பிரபாஸின் மிரட்டலான போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதேநேரம் இந்தப் போஸ்டர் ‘கே.ஜி.எஃப்' கலர் டோனில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனாலும் ரசிகர்கள் இந்த போஸ்டரை அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர். மேலும், ‘The Era Of Salaar Begins' என்ற கேப்ஷன், தரமான லீடையும் கொடுத்துள்ளது.

  English summary
  Prabhas and Prashanth Neel combination making Salaar movie release on next year September
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X