எம்மாடி.. மிரட்டிபுட்டாரு பிரபாஷ்.. இணையத்தை அலறவிட்ட சலார் படத்தின் டிரைலர்!

சென்னை: பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், பிருத்விராஜ் நடித்துள்ள சலார் படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியாகி உள்ளது.

யஷ் நடிப்பில் கேஜிஎஃப் படத்தின் முதல் பாகம் வெளியாகி வசூலை அள்ளியது மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த சினிமா பிரியர்களையும் பிரம்பிப்பில் ஆழ்த்தியது.

Prabhas and Prashanth Neels Salaar Trailer out

இதையடுத்து கேஜிஎஃப் இரண்டாம் பாகம் வெளியாகி சக்கைப்போடு போட்டு வசூலில் 1000 கோடியை தொட்டது.

சலார்: கேஜிஎஃப் படத்தின் வெற்றியின் மொத்த சினிமா உலகமும் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார் பிரசாந்த் நீல். தற்போது இவர், பிரபாஸை வைத்து சலார் படத்தை இயக்கி வருகிறார். பான் இந்திய திரைப்படமாக இப்படம் டிசம்பர் 22ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. பிருத்விராஜ், ஸ்ருதி ஹாசன்,மைம் கோபி, பாபி சிம்ஹா, ஜகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அடுத்தடுத்து தோல்வி: பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபல பிரபாசுக்கு, அதன் பிறகு வெளியான எந்த படமும் வெற்றியை ருசிக்கவில்லை. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் செம மொக்கை என்று சொல்லும் அளவிற்கு படுதோல்வி அடைந்தது. அடுத்தத தோல்வியால் துவண்டு இருக்கும் பிரபாஸ் அடுத்து ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

உச்சாணிக்கொம்பில் பிரபாஸ்: கேஜிஎஃப் படம் யஷ்ஷுக்கு எப்படி ஒரு பெரிய அடையாளமாக கொடுத்ததோ. அதே போல சலார் படமும் பிரபாசுக்கு ஒரு பெரிய அங்கீகாரத்தை கொடுத்து அவரை உச்சாணிக் கொம்பில் ஏற்றிவிடும் என்ற நம்பிக்கையில் படத்தின் வெயீட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.

கர்ஜிக்கும் பிரபாஸ்: இந்நிலையில், சலார் படத்தின் டிரைலரை சத்தமே இல்லாமல் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த டிரைலரில், உனக்காக புழுவாகவும் இருப்பேன்.. திமிங்கலமாகவும் மாறுவேன் என்று கர்ஜிக்கும் குரலுடன் டிரைலர் அதிரடியாக தொடங்குகிறது. மேலும், இந்த டிரைலரில் பிருத்வி ராஜ் மற்றும் பிரபாஸின் எண்ட்ரி சும்மா தரமாக இருக்கிறது. இந்த டிரைலரைப் பார்த்த ரசிகர்கள் எம்மாடி.. மிரட்டிபுட்டாரு பிரபாஸ் என வாயை பிளந்து டிரைலரைப் பார்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X