மாஸ்க் போட்ட பாகுபலி.. ராஜமௌலி வெளியிட்ட .. கொரோனா விழிப்புணர்வு வீடியோ !

ஹைதராபாத் : கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இயக்குனர் ராஜமௌலி பாகுபலி திரைப்படத்தின் ஒரு சிறிய காட்சியை மாற்றியது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Recommended Video

Rana Daggubati Fiance Bio- Data | Rana Miheeka Bajaj, Marriage date

பிரம்மாண்ட படங்களின் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் எஸ்.எஸ் ராஜமௌலி.

மிகப் பிரபலமான இயக்குனரான இவர் பிரம்மாண்ட படங்களை இயக்கி இந்தியாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

முன்னணி இயக்குனர்

முன்னணி இயக்குனர்

தெலுங்கில் ஸ்டூடண்ட் நம்பர் ஒன் என்ற படத்தின் மூலம் இயக்குனர் வாழ்க்கையை தொடங்கிய எஸ்எஸ் ராஜமௌலி பல மெகா ஹிட் படங்களை இயக்கி தற்பொழுது இந்திய அளவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பிள்ளையார் சுழி

பிள்ளையார் சுழி

இவர் இயக்கிய முதல் படமே மிகப்பெரிய வெற்றி அடைந்து பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டியதை தொடர்ந்து இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்த ஜூனியர் என்டிஆர்க்கும் முதல் வெற்றிப்படமாக அமைந்து இருவரது வாழ்விலும் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்தது.

வரலாற்று படங்களை

வரலாற்று படங்களை

மாஸாக ஆரம்பித்தவர்கள் RRR படம் என இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் தொடர்ந்து கமர்ஷியல் படங்களை இயக்கி கொண்டிருந்த ராஜமௌலி 2009ஆம் ஆண்டு வெளியான மகதீரா என்ற படத்தின் மூலம் வரலாற்று படங்களை எடுத்து அதிலும் வெற்றி கண்டார்.

மகதீரா

மகதீரா

மகதீரா கொடுத்த மிகப்பெரிய அங்கீகாரம் இவரை இந்திய அளவில் அனைவரையும் வரலாற்று படங்களை எடுக்க வைத்தது. இருவேறு காலகட்டங்களில் நடக்கின்ற கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட மகதீரா மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து இது தமிழ், மலையாளம் என பல மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

அடுத்த கட்டம்

அடுத்த கட்டம்

இவ்வாறு மகதீரா கொடுத்த வெற்றியைத் தொடர்ந்து இவர் இயக்கிய படம் நான் ஈ. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்ட இந்த படம் வெளியான இரண்டு மொழிகளிலுமே மிகப்பெரிய வெற்றி பெற்று ராஜமௌலி படங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது.

சிறப்பாக கையாண்டு

சிறப்பாக கையாண்டு

ஒரு ஈ பழிக்குப்பழி வாங்கும் என்பதை யாரும் நினைத்துக்கூட பார்த்திராத நிலையில் இப்படி ஒரு கதையை கையில் எடுத்து அதை சிறப்பாக கையாண்டு வெற்றியும் பல விருதுகளையும் பெற்றார். இவ்வாறு வரலாற்று படங்களையும் பிரம்மிக்க வைக்கும் வித்தியாசமான படங்களையும் எடுத்து வந்த இவரின் மீது எதிர்பார்ப்பு மேலும் கூடிக்கொண்டே போனது.

சூப்பர் டூப்பர் ஹிட்

சூப்பர் டூப்பர் ஹிட்

இந்நிலையில் இவர் நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து பாகுபலி என்ற படத்தினை உருவாக்கியிருந்தார். இந்த படத்தின் போஸ்டர் வெளியான போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்ற நிலையில் படமும் உலக அளவில் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி வசூலை வாரி குவித்து சாதனைக்கு மேல் சாதனை படைத்தது.

கொரோனா விழிப்புணர்வு

கொரோனா விழிப்புணர்வு

தனது திரை வாழ்வில் பல ஹிட் படங்களை கொடுத்து இன்றும் முன்னணி இயக்குனராக வலம் வரும் எஸ்எஸ் ராஜமௌலியின் பாகுபலி 2 திரைப்படத்தின் ஒரு சிறிய காட்சியை தற்பொழுது கொரோனா விழிப்புணர்வுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

பிரபாஸ் மற்றும் ராணா

பிரபாஸ் மற்றும் ராணா

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தப்பிக்க முக கவசம் முக்கியமான ஒன்றாக கருதப்பட்டு வரும் நிலையில் பாகுபலியில் பிரபாஸ் மற்றும் ராணா ஆக்ரோசமாக இருக்கும் ஒரு காட்சியில் இருவருக்கும் VFX மூலம் மாஸ்க் அணிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த வீடியோவை இயக்குனர் ராஜமௌலி தனது முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். பலரும் பல வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த வித்தியாசமான பாகுபலி விழிப்புணர்வு அனைவரையும் கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X