பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ்.. ஷூட்டிங் தொடங்கும் முன்பே ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

By

சென்னை: பிரபாஸ் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்பே அதன் ரிலீஸ் தேதியை படக்குழு இன்று அறிவித்துள்ளது.

ராஜமவுலியின் பாகுபலியில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார், நடிகர் பிரபாஸ்.

இதையடுத்து அவர் நடிக்கும் படங்கள், இப்போது பான் இந்தியா முறையில் உருவாகி வருகிறது.

பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே

பாகுபலி-க்குப் பிறகு அவர் நடித்த சாஹோ படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியானது. அடுத்து ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். கே.கே. ராதாகிருஷ்ணா இயக்கி வருகிறார். இதில் பூஜா ஹெக்டே ஹீரோயின். பீரியட் காதல் கதையான இது, ஐரோப்பிய பின்னணியில் நடக்கிறது.

இஸ்ரேலில் ஷூட்டிங்

இஸ்ரேலில் ஷூட்டிங்

இதன் ஷூட்டிங், கொரோனாவுக்கு முன்புவரை ஜார்ஜியாவில் நடந்து வந்தது. பின்னர் இஸ்ரேலில் நடந்துள்ளது. அடுத்து நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் நடிக்கிறார், பிரபாஸ். அதில் தீபிகா படுகோன் ஹீரோயின். இந்தப் படம் எப்போது தொடங்கும் என தெரியவில்லை.

ஒரு பகுதி ராமாயணம்

ஒரு பகுதி ராமாயணம்

இதற்கிடையே அவர் 'ஆதிபுருஷ்' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்திப் பட இயக்குனர் ஓம்ராவத் இயக்கும் இந்தப் படம் பற்றிய அறிவிப்பையும் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிட்டிருந்தனர். ராமாயணக் காவியத்தின் ஒரு பகுதி கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது.

காவிய கதாபாத்திரம்

காவிய கதாபாத்திரம்

இந்தி, தெலுங்கில் உருவாக இருக்கும் இந்தப் படத்தை தமிழ், மலையாளம், கன்னட மொழிகளிலும் வெளியிடுகின்றனர். 3டி-யில் உருவாகும் இந்த படம் பற்றி பிரபாஸ் கூறும்போது, ஒவ்வொரு கேரக்டரும் சவாலானது. இந்த காவிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆவலுடன் இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

வில்வித்தை பயிற்சி

வில்வித்தை பயிற்சி

இந்தப் படத்தில் அவர் ராமராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் வில்வித்தை பயிற்சியை மேற்கொள்ளுமாறு இயக்குனர், பிரபாஸை கேட்டுக்கொண்டுள்ளார். ஏற்கனவே பாகுபாலி படத்துக்காக அந்தப் பயிற்சியை பெற்றிருந்தாலும் இந்தப் படத்துக்காக தீவிரமாக பயிற்சி பெற இருக்கிறார். இதில் வில்லனாக இந்தி நடிகர் சைஃப் அலிகான் நடிக்க இருக்கிறார்.

ரிலீஸ் தேதி

ரிலீஸ் தேதி

இந்நிலையில், இந்தப் படம் பற்றிய அப்டேட் இன்று வெளியிடப்படும் என்று படக்குழு நேற்று கூறியிருந்தது. அதன்படி நடிகர் பிரபாஸ், படத்தின் அப்டேட்டை தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். அதில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 11.08.2022 அன்று படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் ஷூட்டிங் ஜனவரியில் தொடங்க இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X