பிரபாஸும், அனுஷ்காவும் ஆசைப்பட்டாலும் திருமணம் செய்ய முடியாது: ஏனென்றால்...

By Siva

Recommended Video

பிரபாஸும், அனுஷ்காவும் திருமணம் செய்ய முடியாது- வீடியோ

ஹைதராபாத்: அனுஷ்காவும், பிரபாஸும் ஆசைப்பட்டால் கூட சேர முடியாது என்று தகவல் வெளியாகியுள்ளது.

பாகுபலி படத்தில் நடித்தபோது அனுஷ்காவும், பிரபாஸும் காதலில் விழுந்ததாக கூறப்பட்டது. இருவரும் அதை உறுதிப்படுத்தவில்லை என்றாலும் இன்னும் காதலிப்பதாக தெலுங்கு திரையுலகில் பேச்சு உள்ளது.

இந்நிலையில் அவர்களை பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது.

பிரபாஸ்

பிரபாஸ்

அனுஷ்கா என் குடும்ப நண்பர். அதை தவிர வேறு ஒன்றும் இல்லை என்று பிரபாஸ் கூறியதற்கு அர்த்தம் உள்ளதாம். அவர்களே விரும்பினாலும் திருமணம் செய்து கொள்ள முடியாதாம்.

குடும்பம்

குடும்பம்

அனுஷ்கா, பிரபாஸின் குடும்பச் சூழலால் இருவரும் திருமணம் செய்ய முடியாதாம். பிரபாஸின் பெற்றோர் மற்றும் குடும்பத்தார் அவராக எந்த பெண்ணை தேர்வு செய்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

பிரபாஸ் குடும்பத்தை பொறுத்தவரை காதல் திருமணம் என்பது மிகவும் தப்பான விஷயமாம். குடும்பத்தார் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் அனுஷ்காவும், பிரபாஸும் தங்களின் நட்பை நட்போடு நிறுத்திக் கொள்வார்கள் என்று அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

பெரியப்பா

பெரியப்பா

பிரபாஸ் அவரின் அப்பா மற்றும் பெரியப்பாவுக்கு மிகவும் நெருக்கமாம். அவர்களின் விருப்பத்திற்கு எதிராக அவர் எதுவும் செய்ய மாட்டாராம். பிரபாஸின் அப்பா கடந்த 2010ம் ஆண்டு மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்

பெண்

குடும்பத்தார் பார்க்கும் பெண்ணை தான் பிரபாஸ் திருமணம் செய்து கொள்வாராம். அவருக்கு பெண் தேடும் வேலை ஏற்கனவே துவங்கி தீவிரமாக நடந்து வருகிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X