தங்களை பற்றிய ரகசியத்தை சொன்ன பாகுபலி ஜோடி பிரபாஸ், அனுஷ்கா
ஹைதராபாத்: காதலர்கள் என்று கிசுகிசுக்கப்படும் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா தங்களை பற்றிய ரகசியத்தை தெரிவித்துள்ளார்கள்.
நடிகர் பிரபாஸும், நடிகை அனுஷ்காவும் காதலிப்பதாக மாதக் கணக்கில் கிசுகிசுக்கப்படுகிறது. இருவரும் அதை பற்றி கண்டுகொள்ளாமல் தங்கள் படங்களில் பிசியாக உள்ளனர்.
இந்நிலையில் இருவரும் தங்களை பற்றிய ரகசியத்தை தெரிவித்துள்ளனர்.

பிரபாஸ்
சிறு வயதில் இருந்தே பிரபாஸுக்கு வாலிபால் விளையாடப் பிடிக்குமாம். எப்பொழுது மனது சரியில்லாவிட்டாலும் வாலிபால் விளையாடினால் உற்சாகமாகிவிடுவாராம்.

வீடு
பிரபாஸ் தனது வீட்டு வளாகத்தில் வாலிபால் கோர்ட் அமைத்துள்ளாராம். நேரம் கிடைக்கும்போது எல்லாம் நண்பர்களுடன் சேர்ந்து வாலிபால் விளையாடுவாராம் பிரபாஸ்.

விளையாட்டு
வாலிபால் விளையாடுவதால் உடல் வலுப்பெறுவதுடன் மனம் தெம்பாகிறது. குழுவாக செயல்பட விளையாட்டு உதவுகிறது என்று பிரபாஸ் தனது ரகசியத்தை தெரிவித்துள்ளார்.

அனுஷ்கா
அனுஷ்கா மன அழுத்தத்தை போக்க யோகா செய்வதுடன் செல்லப் பிராணியுடன் விளையாடுவாராம். ஷூட்டிங் சென்றாலும் வீட்டிற்கு போன் போட்டு தனது செல்லத்தின் நலன் பற்றி கேட்பாராம்.

பிசி
செல்லப் பிராணியுடன் நேரம் செலவிடுவது ஸ்ட்ரெஸ்ஸை போக்குகிறது. என் பிசியான வாழ்க்கையில் செல்லப் பிராணியால் மகிழ்ச்சி ஏற்படுகிறது என்கிறார் அனுஷ்கா.

புத்தகம்
எனக்கு பார்ட்டிகளுக்கு செல்ல பிடிக்காது. நேரம் கிடைக்கும் போது எல்லாம் புத்தகம் படிப்பேன், செல்லப் பிராணியுடன் விளையாடுவேன் என்கிறார் அனுஷ்கா.


Click it and Unblock the Notifications











