மீண்டும் இணைந்த பாகுபலி கூட்டணி… பழைய நினைவுகளால் சிறகடித்த பிரபாஸ், அனுஷ்கா!

லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் ஹால் தியேட்டரில் பாகுபலி படம் இன்று சிறப்பு திரையிடல் செய்யப்படுகிறது. அதற்காக பாகுபலியின் குழுவினர் ஒன்றிணைந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Bhahubali Royal Reunion in London

லண்டன்: எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் உருவான பாகுபலி மற்றும் பாகுபலி 2ம் பாகம் திரைப்படங்கள் உலகளவில் வசூல் சாதனையை நிகழ்த்தியது.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் சத்யராஜ் நடிப்பில் உருவான பாகுபலி திரைப்படம் இந்தியா படங்களிலேயே அதிக வசூலை ஈட்டியது.

லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் திரையரங்கில் இன்று பாகுபலி படம் சிறப்பு காட்சியாக திரையிடப்படுகிறது. இதனால், பாகுபலி கூட்டணி மீண்டும் ஒன்று கூடியுள்ளது.

பிரம்மாண்ட வெற்றி

பிரம்மாண்ட வெற்றி

இந்தியாவில் இதுவரை வெளியான படங்களிலே 1500 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாகுபலி திரைப்படம் முதலிடத்தில் உள்ளது. அவெஞ்சர்ஸ் நடிகர்கள் வரை பாகுபலி படத்திற்கு ரசிகர்கள் ஆனது இதில் தனிக்கதை.

அடுத்த பிரம்மாண்டம்

அடுத்த பிரம்மாண்டம்

பாகுபலி வெற்றிக்கு பிறகு ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட் நடிப்பில் இந்தியளவில் மீண்டுமொரு பிரம்மாண்ட படமாக ஆர்.ஆர்.ஆர் படத்தை ராஜமெளலி இயக்கி வருகிறார். இந்த படம் பாகுபலியின் சாதனையை முறியடிக்குமா என்பது படத்தின் பிரம்மாண்டத்தை பொறுத்து தான் என பாகுபலி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

காதல் கிசுகிசு

காதல் கிசுகிசு

பாகுபலி படத்தில் நடித்த பிரபாசுக்கும், அனுஷ்காவுக்கும் காதல் ஏற்பட்டதாகவும், படத்திற்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வலம் வந்தன. ஆனால், இதுவரை இருவரும் இதுகுறித்த எந்தவொரு அறிவிப்பும் வெளியிடாத நிலையில், இன்று லண்டனில் ஒன்று கூடி செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளனர்.

லண்டனில் பாகுபலி

இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த பாகுபலி திரைப்படம் சீனாவில் வெளியாகி அங்கும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இன்று லண்டனில் உள்ள பிரபல ஆல்பர்ட் ஹாலில் பாகுபலியின் இரண்டு பாகங்களும் அடுத்தடுத்து திரையிடப்படுகின்றன. இந்த திரைப்படத்திற்கு லண்டன் ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் நேரில் காண ராஜமெளலி, பிரபாஸ், அனுஷ்கா மற்றும் ராணா லண்டனில் முகாமிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X