Prabhas: ஜப்பானில் நிலநடுக்கம்..பிரபாஸ் அங்கதான் இருக்காரா? அச்சச்சோ என்னாச்சு? பதறும் ரசிகர்கள்

ஜப்பான்: ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்னர், அதாவது டிசம்பர் 8 அன்று ஏற்பட்ட 7.6 ரிக்டர் நிலநடுக்கம் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தின் போது, நடிகர் பிரபாஸ் ஜப்பானில் இருந்துள்ளார். இதனால் அவருக்கு என்ன ஆனது? அவர் தற்போது எப்படி உள்ளார் என்ற கேள்விகளை ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வந்தனர். இந்நிலையில் ராஜா சாப்' திரைப்படத்தின் இயக்குநர் மாருதி, பிரபாஸ் நலமாக இருப்பதாக சமூக வலைத்தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் ரசிகர்கள் நிம்மதியாக உள்ளனர்.

அதாவது ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில், ஜப்பானில் மோசமான நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எங்கள் அபிமான நடிகர் பிரபாஸ் அங்குள்ளார். அவர் எப்படி இருக்கிறார் என்று யாராவது சொல்லுங்களேன்?' என பதிவிட்டார். இதற்கு பதிலளித்த மாருதி, "நான் பிரபாஸுடன் பேசினேன். அவர் டோக்கியோவில் இல்லை, பாதுகாப்பாக இருக்கிறார், கவலை வேண்டாம்" என்றார். இச்செய்தி பல ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

Prabhas at Japan For Bahubali The Epic Promotions During Earthquake The Raja Saab Director Confirmed Prabhas Safety
Photo Credit:

பாகுபலி திரைப்படத்தின் பத்தாம் ஆண்டு கொண்டாட்டங்களுக்காக, 'பாகுபலி: தி எபிக்' படத்தை விளம்பரப்படுத்த பிரபாஸ் ஜப்பானுக்குச் சென்றுள்ளார். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவான, 'பாகுபலி: தி பிகினிங்' மற்றும் 'பாகுபலி 2: தி கன்க்ளூஷன்' ஆகியவற்றை ஒன்றிணைத்து ரீ எடிட் செய்யப்பட்ட படம் பாகுபலி: தி எபிக். இந்த படம் ஜப்பானின் டோக்கியோ உள்ளிட்ட நகரங்களில் சிறப்புத் திரையிடப்படுகிறது.

பிரபாஸ் ஜப்பானில் இருக்கும் போது, அவரது 'தி ராஜா சாப்' ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வேகமாக பரவின. தயாரிப்பு தரப்பில் படம் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று தெரிவித்த நிலையில், சில இணையவாசிகள் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கலாம் என்று பேசி வந்தார்கள். ஆனால் தயாரிப்பு தரப்பு அதை முற்றிலுமாக மறுத்துவிட்டது.

Prabhas at Japan For Bahubali The Epic Promotions During Earthquake The Raja Saab Director Confirmed Prabhas Safety
Photo Credit:

ரிலீஸ் தேதி: இந்நிலையில் படக்குழு வெளியிட்ட அறிவிப்பில், 'தி ராஜா சாப்' ஜனவரி 9, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை மீண்டும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது. படத்தின் ரிலீஸ் வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஜனவரி 9 தியேட்டரில் சந்திக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

படக்குழு: படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் ஆகியோர் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கின்றனர். இந்த படத்தின் மூலம் மாளவிகா மோகனன் தெலுங்கில் நேரடியாக நடிக்கிறார். பிரபாஸ் தற்போது ஜப்பானில் நடைபெறும் 'பாகுபலி: தி எபிக்' புரோமோசன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார். ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்னர், அதாவது டிசம்பர் 8 அன்று ஏற்பட்ட 7.6 ரிக்டர் நிலநடுக்கம் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

ரசிக்ர்கள் நிம்மதி: இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தின் போது, நடிகர் பிரபாஸ் ஜப்பானில் இருந்துள்ளார். இதனால் அவருக்கு என்ன ஆனது? அவர் தற்போது எப்படி உள்ளார் என்ற கேள்விகளை ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வந்தனர். இந்நிலையில் 'தி ராஜா சாப்' திரைப்படத்தின் இயக்குநர் மாருதி, பிரபாஸ் நலமாக இருப்பதாக சமூக வலைத்தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் ரசிகர்கள் நிம்மதியாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X