Prabhas: சொந்த பணம் போட்டு கேரியரை சோலி முடிக்குறாங்க.. பிரபாஸையும் விட்டு வைக்காத ப்ளூ சட்டை மாறன்

சென்னை: பிரபாஸ் நடிப்பில் அதிக எதிர்பார்ப்பில் உள்ள ப்ராஜெக்ட் கே படத்தின் க்ளிம்ப்ஸ் நாளை வெளியாகிறது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் கமல், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் ஆகியோரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், ப்ராஜெக்ட் கே படத்தில் இருந்து பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.

 Prabhas: Blue Sattai Maran Trolls Prabhas First Look Poster of Project K

ரசிகர்களுக்கு ஏமாற்றம் கொடுத்துள்ள இந்த போஸ்டரை ப்ளூ சட்டை மாறன் பங்கமாக ட்ரோல் செய்துள்ளார்.

பிரபாஸையும் விட்டு வைக்காத ப்ளூ சட்டை மாறன் : டோலிவுட் ரசிகர்களால் டார்லிங் என கொண்டாடப்படும் பிரபாஸ், பாகுபலி படத்திற்குப் பின்னர் பான் இந்தியா சூப்பர் ஸ்டார் என ப்ரொமோட் செய்யப்பட்டார். இதனால், அடுத்தடுத்து வெளியான சாஹோ, ராதேஷ்யாம் ஆகிய படங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், பிரபாஸே எதிர்பார்க்காத அளவிற்கு இந்த இரண்டு படங்களும் செம்ம மொக்கை வாங்கின.

அதன்பின்னர் ஆதிபுருஷ் மூலம் கம்பேக் கொடுத்துவிடலாம் என கனவில் மிதந்து வந்தார் பிரபாஸ். ஆனால், கடந்த மாதம் வெளியான ஆதிபுருஷ் பிரபாஷின் மார்க்கெட்டை அதாள பாதாளத்தில் வைத்து ஒரேடியாக புதைத்துவிட்டது. இதனால், உடனடியாக சலார் டீசர் வெளியிடப்பட்டது. அதிலும் பிரபாஸ் ரசிகர்களுக்கு திருப்தி இல்லையென்பதால் இப்போது ப்ராஜெக்ட் கே படத்தின் அப்டேட்டை அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றனர்.

சத்தமே இல்லாமல் உருவாகிவந்த ப்ராஜெக்ட் கே, ஆதிபுருஷ் வாங்கிய மரண அடிக்குப் பின்னர் சவுண்டு சரோஜாவாக மாறிவிட்டது. முதலில் கமல்ஹாசன் நடிப்பதை கன்ஃபார்ம் செய்த படக்குழு, தற்போது அமெரிக்கா சென்று க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிடவுள்ளனர். இதற்காக கமல் உட்பட ப்ராஜெக்ட் கே படக்குழு அமெரிக்கா சென்றுவிட்ட நிலையில், நேற்று பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

ப்ராஜெக்ட் கே காமிக்ஸ் ஜானரில் சூப்பர் ஹீரோ படமாக உருவாகுவதால், பிரபாஸின் லுக்கை எக்ஸ்ட்ரா லேபர்ஸ் போட்டு செதுக்கி இருப்பார்களோ என்னவோ. கமிக்ஸ் ஹீரோ பாதி, இதிகாச புராண நாயகன் மீதி என பிரபாஸுக்கு கலந்துகட்டி பட்டி டிங்கரிங் பார்த்துள்ளனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியானது முதலே பிரபாஸின் ரசிகர்கள் பேரதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். "சோனமுத்தா இதுவும் போச்சா" என இன்னும் பிளக்ஸ் பேனர் வைக்காமல் விட்டது மட்டும் தான் குறை.

 Prabhas: Blue Sattai Maran Trolls Prabhas First Look Poster of Project K

ஆகமொத்தம் ப்ராஜெக்ட் கே படமும் பிரபாஸுக்கு போங்கு தான் என ரசிகர்கள் இப்போதே முடிவு செய்துவிட்டனர். இந்நிலையில் சும்மாவே காலில் சலங்கை கட்டி ஆடும் ப்ளூ சட்டை மாறன், பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து பேயாட்டம் ஆடியுள்ளார். களவாணி படத்தில் வரும் கஞ்சா கருப்பு காமெடியின் மீம்ஸ்ஸை வைத்து பிரபாஸை பங்கம் செய்துள்ளார். தயாரிப்பாளரை பார்த்து பிரபாஸ் கேட்பதாக இந்த மீம் உள்ளது.

அதாவது, "அப்படி சொந்த காசு போட்டு செலவு பண்ணி என் கேரியரை முடிக்குறதுல அப்படி என்னடா உங்களுக்கு சந்தோஷம்" என அந்த மீமில் கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. பாகுபலிக்குப் பின்னர் பிரபாஸ் நடிக்கும் படங்கள் அனைத்தும் மினிமம் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது. அவருக்கும் பல கோடிகளை சம்பளமாக வாரி வழங்குகின்றனர். ஆனாலும், கோடிகளை கொடுத்து பிரபாஸின் கேரியரை சோலி முடிப்பதே தொடர்ந்து நடக்கிறது.

இந்நிலையில், பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கே இந்த நிலை என்றால், நாளை வெளியாகும் க்ளிம்ப்ஸ் வீடியோவை எப்படி தோரணம் கட்டி தொங்கவிடப் போகிறார்களோ என பிரபாஸின் ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X