ரூ.6 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய பிரபாஸ்...டிரெண்டிங் ஆகும் ஃபோட்டோஸ்
ஐதராபாத் : நடிகர் பிரபாஸ் சமீபத்தில் Aventador S Roadster மாடல் Lamborghini காரை வாங்கி உள்ளார். இந்த வகை சொகுசு காரை வாங்கி இருக்கும் முதல் இந்திய நடிகர் பிரபாஸ் தான்.
இந்த சொகுசு காரை தனது தந்தை சூர்ய நாராயணாவின் பிறந்த நாளுக்கு பரிசாக தருவதற்காக தான் பிரபாஸ் வாங்கி உள்ளாராம். இந்த சொகுசு காரின் விலை ரூ.6 கோடி. இந்த ஆரஞ்சு நிற கார் தான் இப்போது சமூக வலைதளங்களின் கவனத்தை ஈர்த்து, டிரெண்டிங் ஆகி உள்ளது.

இந்த சொகுசு காரை பிரபாஸ் ஓட்டுவது போன்ற ஃபோட்டோக்களும், வீடியோக்களும் தான் அவரது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் படம் ஜூலை 31 ம் தேதி ரிலீசாக உள்ளது.
இதைத் தொடர்ந்து ஸ்ருதிஹாசனுடன் சலார், ஆதிபுருஷ் ஆகிய படங்களிலும் பிரபாஸ் நடிக்கிறார். இவரின் அடுத்தடுத்த படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது பிரபாஸ் வாங்கி இருக்கும் காஸ்ட்லி கார் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











