Prabhas Net Worth: பண்ணை வீடு.. பல கோடி சொத்து.. நிஜமாவே ராஜா போல வாழும் பிரபாஸ்!

சென்னை: நடிகர் பிரபாஸ் தனது 44-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் வெளியாக உள்ள சலார் படத்தின் பிரம்மாண்ட கட்டவுட்டை 230 அடிக்கு பிரபாஸ் ரசிகர்கள் வைத்து பிரமிப்பை கிளப்பியுள்ளனர்.

1979 ஆம் ஆண்டு அக்டோபர் 23-ஆம் நாள் சென்னையில் பிறந்த நடிகர் பிரபாஸ் இன்று தனது 44-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Prabhas celebrates his 44th birthday today, here we look out about his salary and net worth details

44 வயது: பாகுபலி படத்தின் மூலம் ஒட்டுமொத்த உலகையே திரும்பிப் பார்க்க வைத்த பிரபாஸ் அடுத்ததாக கே ஜி எஃப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடித்துள்ள சலார் படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து நடிகர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாபச்சன், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி நடித்துள்ள கல்கி திரைப்படமும் வெளியாக காத்திருக்கிறது.

ஒரு படத்துக்கு சுமார் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வரும் நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்திற்கு பிறகு பான் இந்திய நடிகராக வலம் வருகிறார். பாலிவுட்டில் சாஹோ, ஆதி புருஷ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சொத்து மதிப்பு: 44 வயதாகியும் இன்னமும் திருமணமாகாத நிலையில், இந்த ஆண்டு நடிகர் பிரபாஸ் திருமணம் செய்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவரது சொத்து மதிப்பு மட்டும் சுமார் 237 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

65 கோடி ரூபாயில் பிரம்மாண்ட பண்ணை வீடு நடிகர் பிரபாஸுக்கு உள்ளநிலையில், இத்தாலியிலும் ஒரு சொகுசு மேன்ஷனை வாங்கி வாடகைக்கு விட்டுள்ளார் பிரபாஸ் என்றும் கூறுகின்றனர்.

Prabhas celebrates his 44th birthday today, here we look out about his salary and net worth details

சொகுசு கார்: 2 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ், ஒரு கோடி மதிப்புள்ள ஜாகுவார், 60 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மற்றும் எட்டு கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் ஃபேண்டம் என பல சொகுசு கார்களை வாங்கி அடுக்கி உள்ளார்.

டார்லிங் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் பிரபாஸ் மீண்டும் ராஜமௌலி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் பிரபாஸை வைத்து ஒரு படம் இயக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X