அடேங்கப்பா, இவ்ளோ கோடியா? சயின்ஸ்பிக்சன் படத்துக்கு ஹீரோவோட சம்பளத்தை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க?
சென்னை: மூன்று மொழிகளில் உருவாக இருக்கும் சயின்ஸ் பிக்சன் படத்துக்காக, ஹீரோவுக்கு பேசியுள்ள சம்பளம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
'பாகுபலி' மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றவர், தெலுங்கு ஹீரோ பிரபாஸ். இதை தொடர்ந்து மெகா பட்ஜெட் படமான 'சாஹோ'வில் நடித்தார்.
இதில் ஸ்ரத்தா கபூர், ஜாக்கி ஷெராப், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ் உட்பட பலர் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, இந்தியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப் படம் உருவானது.

ராதா கிருஷ்ணா
ஆனால், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து இந்தப் படத்தை தயாரித்த யுவி கிரியேஷின் அடுத்த படத்திலும் பிரபாஸ் நடித்து வருகிறார். இதை கே கே ராதாகிருஷ்ணா இயக்கி வருகிறார். படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது.

சயின்ஸ் பிக்சன்
இதையடுத்து பிரபாஸ் நடக்கும் படத்துக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 'நடிகையர் திலகம்' படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இந்தப் படம் சயின்ஸ் பிக்சன் படமாம். மூன்றாம் உலகப் போர் என்ற விஷயத்தை மையமாக வைத்து படம் உருவாக இருக்கிறதாம்.

மூன்று மொழிகளில்
இதை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. தெலுங்கு சினிமாவின் பழமையான தயாரிப்பு நிறுவனம் இது. இந்தப் படமும் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கிறது. இதனால், இந்தி நடிகை ஒருவரை ஹீரோயினாக நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இதுவரை தெலுங்கு சினிமாவில் நடிக்க ஒரு ஹீரோயினை தேடி வருவதாகக் கூறப்படுகிறது.

பிரபாஸ் சம்பளம்
இதற்கிடையே, இந்தப் படத்துக்கு பிரபாஸ் சம்பளமாக ரூ.70 கோடி பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதோடு சில நிபந்தனைகளையும் பிரபாஸ் விதித்து இருக்கிறாராம். அதாவது 12 மாதத்துக்குள் ஷூட்டிங்கை முடிக்க வேண்டும். லேட்டானால், அதற்கு தனி சம்பளம் தரவேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்களாம். இந்தப் படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











