ஒரு வழியாக ஷூட்டிங் ஓவர்.. மொத்த பட யூனிட்டுக்கும் காஸ்ட்லி கிஃப்ட் கொடுத்த பிரபல ஹீரோ!

By

ஐதராபாத்: படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து பணியாற்றிய அனைவருக்கும் கிஃப்ட் கொடுத்திருக்கிறார், படத்தின் ஹீரோ.

நடிகர் பிரபாஸ், இப்போது ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். கே.கே. ராதாகிருஷ்ணா இதை இயக்குகிறார்.

பூஜா ஹெக்டே ஹீரோயின். பீரியட் காதல் கதையான இது, ஐரோப்பிய பின்னணியில் நடக்கிறது.

இரண்டு கேரக்டர்

இரண்டு கேரக்டர்

இதன் ஷூட்டிங், கொரோனாவுக்கு முன்பு வரை ஜார்ஜியாவில் நடந்து வந்தது. படத்தில், பூஜா ஹெக்டேவுக்கு இரண்டு கேரக்டர் என்று கூறப்படுகிறது. பூஜா ஹெக்டே, தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில், ஜீவாவிற்கு ஜோடியாக
நடித்தவர். பிறகு தமிழில் அதிக படங்களில் நடிக்கவில்லை.

மோஷன் வீடியோ

மோஷன் வீடியோ

தெலுங்கில் கவனம் செலுத்திய பூஜா ஹெக்டே, இந்தியிலும் நடித்து வருகிறார். ராதே ஷ்யாம் படத்தில், பூஜா, பிரபாஸ் கேரக்டர்கள் சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப் பட்டன. பிறகு பிரபாஸின் பிறந்தநாள் அன்று மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.

ரொமான்ஸ் லுக்

ரொமான்ஸ் லுக்


அழகான காட்டுக்குள் செல்லும் ரயிலில் பூஜாவும் பிரபாஸும் ரொமான்ஸ் லுக்கில் நிற்கும் காட்சி இதில் இடம்பெற்றது. அந்த போஸ்டர் சோசியல் மீடியாவில் வேகமாக பரவியது. இந்தப் படத்தில், சச்சின் கடேகர், பாக்யஸ்ரீ, பிரியதர்ஷினி, முரளி சர்மா, சாஷா சேத்ரி, குனால் ராய் நடித்துள்ளனர். இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் இந்தப் படம் வெளியிடப்படுகிறது.

ஜஸ்டின் பிரபாகரன்

ஜஸ்டின் பிரபாகரன்

வம்சி மற்றும் பிரமோத், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் படத்தைத் தயாரிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். மனோஜ் பரமஹம்ஸா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. கடுமையானச் சூழலிலும் இந்தப் படத்துக்காகக் கஷ்டப்பட்டு உழைத்தவர்களுக்கு கிஃப்ட் கொடுக்க முடிவு செய்தார், ஹீரோ பிரபாஸ்.

காஸ்ட்லி வாட்ச்

காஸ்ட்லி வாட்ச்

இதையடுத்து படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் காஸ்ட்லியான வாட்ச் ஒன்றை அவர் பரிசளித்துள்ளார். இந்தப் படத்தின் டீசரை நடிகர் பிரபாஸ், விரைவில் வெளியிட இருக்கிறார். படத்தை ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியிட, படக்குழு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X