»   »  'பாகுபலி 2' ரிலீஸானதும் ரசிகைகளின் மனதில் இடியை இறக்கும் பிரபாஸ்?

'பாகுபலி 2' ரிலீஸானதும் ரசிகைகளின் மனதில் இடியை இறக்கும் பிரபாஸ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாகுபலி புகழ் பிரபாஸுக்கு இந்த ஆண்டு இறுதியில் திருமணம் என்று கூறப்படுகிறது.

பிரபாஸ் நடித்துள்ள பாகுபலி 2 படம் வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி ரிலீஸாகிறது. பாகுபலி 2 ட்ரெய்லர் தான் யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய பட ட்ரெய்லர் என்ற சாதனையை படைத்துள்ளது.

Prabhas to ditch bacherlorhood this year?

இந்நிலையில் பிரபாஸுக்கு திருமணம் என்ற பேச்சு கிளம்பியுள்ளது. பிரபாஸுக்கு திருமணம் மீது விருப்பம் இல்லாமல் இருந்தது. அவரது குடும்பத்தார் பேசிப் பேசி அவர் மனதை மாற்றியுள்ளார்களாம்.

மேலும் பிரபாஸுக்கு பெண் பார்த்து வைத்துள்ளார்களாம். இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது. பாகுபலி 2 ரிலீஸ் இருக்கும் நேரத்தில் திருமணம் பற்றி பேசினால் அனைவரின் கவனமும் படத்தில் இருந்து திரும்பிவிடும் என நினைத்து பிரபாஸ் இது குறித்து பேசவில்லையாம்.

படம் ரிலீஸான பிறகு பிரபாஸ் திருமணம் குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
According to reports, actor Prabhas is set to tie the knot by the end of this year. It is expected that he will reveal his marriage plans after the release of Baahubali 2.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil