என்னடா இது பான் இந்தியா ஸ்டார் பிரபாஸுக்கு வந்த சோதனை.. தீயாக பரவும் புகைப்படம்.. உண்மை என்ன?

ஹைதராபாத்: பான் இந்தியா நடிகராக மாஸ் காட்டி வரும் நடிகர் பிரபாஸின் உடல் எடை அதிகரித்த நிலையில் அவரது புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், தற்போது இன்னொரு புகைப்படம் வெளியாகி பிரபாஸ் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஷாருக்கானின் ஜவான் படம் வெளியாக உள்ள நிலையில், செப்டம்பர் 28ல் சலார் படம் வெளியாகிறது. கேஜிஎஃப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன் நடித்துள்ள சலார் படம் நிச்சயம் பிரபாஸுக்கு கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Prabhas fake morphing photo trending in social media

சலார் மூலம் கம்பேக்: ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்த சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் என வரிசையாக 3 பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் படுதோல்வியை சந்தித்து மிகப்பெரிய நஷ்டத்தை உருவாக்கின.

சலார் படத்தின் டீசர் வெளியான நிலையிலும், அதில் பிரபாஸை காட்டாமல் இயக்குநர் மறைத்த நிலையில், கடும் ட்ரோலுக்கு அந்த டீசர் தள்ளப்பட்டது. ஆனாலும், படம் வெளியானால் கண்டிப்பாக பிரசாந்த் நீல் பெரிய சம்பவத்தை செய்வது உறுதி என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

எல்லா படத்துக்கும் வேட்டு: இந்த ஆண்டு வெளியான அனைத்து இந்திய படங்களையும் தூக்கி சாப்பிட்டு விடும் சலார் என்றும் அதிகபட்சமாக 1000 கோடி வசூலை அள்ளிய பதான் மற்றும் 500 கோடி வசூலை அள்ளிய ஜெயிலர் படங்களை பின்னுக்குத் தள்ளி மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் சாதனையை சலார் படைக்கும் என பிரபாஸ் ரசிகர்கள் கெத்துக் காட்டி வருகின்றனர்.

ஒரு பக்கம் பிரபாஸ் ரசிகர்கள் சலார் படத்திற்கு பில்டப் கொடுத்துக் கொண்டிருக்க பிரபாஸ் ஹேட்டர்கள் பகீர் கிளப்பும் பிரபாஸின் புகைப்படம் ஒன்றை ஷேர் செய்து வருகின்றனர். அதில், நடிகர் பிரபாஸின் தலையில் முடியே இல்லாமல் இருப்பது பலரையும் திடுக்கிட செய்துள்ளது.

அது மார்பிங்: நடிகர் பிரபாஸின் புகைப்படம் மார்பிங் என்றும் ரியல் புகைப்படம் இதுதான் என இன்னொரு புகைப்படத்தையும் பிரபாஸ் ரசிகர்கள் பதிவிட்டு ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

பிரபாஸ் மீதான வன்மத்தைக் கொட்ட இப்படியெல்லாம் பண்ணலாமா என்றும் பாக்ஸ் ஆபிஸில் அனைவருக்கும் மாஸாக பதிலடி கொடுப்பார் பிரபாஸ் என்றும் சலார் மற்றும் கல்கி படம் வெளியான பின்னர், அந்த படங்களின் வசூல் தான் பெஞ்ச் மார்க்காக இருக்கும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X