பிரபாஸுக்கு பெண் பார்த்தாச்சு: அந்த பெண் அனுஷ்கா...
Recommended Video

ஹைதராபாத்: நடிகர் பிரபாஸுக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்துவிட்டார்களாம்.
38 வயதாகும் நடிகர் பிரபாஸுக்கு இந்த ஆண்டே திருமணம் செய்து வைக்க அவர் குடும்பத்தார் முடிவு செய்துள்ளார்கள். இந்த ஆண்டு பிரபாஸின் திருமணம் நிச்சயம் நடக்கும் என்று அவரின் பெரியப்பா கிருஷ்ணம் ராஜு கூட தெரிவித்தார்.
இந்நிலையில் பெண் பார்த்தாகிவிட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிரபாஸ்
பிரபாஸுக்கு பெண் பார்த்தாகிவிட்டது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரின் குடும்பத்தார் முடிவு செய்துள்ளார்களாம். இந்த தகவலை அவரது குடும்ப நண்பர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். பிரபாஸ் குடும்பத்தாரின் அனுமதி இல்லாமல் அவர் தகவலை கசிய விட்டிருக்க மாட்டார்.

அனுஷ்கா
பாகுபலி படத்தில் நடித்த போது பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இது குறித்து அனுஷ்கா எதுவும் கூறவில்லை. ஆனால் பிரபாஸ் மறுப்பு தெரிவித்தார். எனக்கு திருமணம் நிச்சயமானதும் உங்களிடம் கூறிவிட்டு தான் மணப்பேன் என்று கூறினார் பிரபாஸ். ஆனால் தற்போது அவருக்கு பார்த்திருக்கும் பெண் யார் என்று தெரியவில்லை.

அனுஷ்கா
பிரபாஸுக்கு பார்த்திருக்கும் பெண் அனுஷ்காவாகத் தான் இருக்கும். காதலர்களான அவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று தெலுங்கு திரையுலகில் பேசப்படுகிறது. அனுஷ்கா எங்களின் குடும்ப நண்பர் மட்டுமே என்று பிரபாஸ் மீண்டும் மீண்டும் கூறுவதை யாரும் நம்பத் தயாராக இல்லை. அவருக்கு பார்த்திருக்கும் பெண் அனுஷ்காவா?

குடும்பம்
36 வயதாகும் அனுஷ்காவுக்கு இந்த ஆண்டே திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தாரும் மாப்பிள்ளை தேடி வருகிறார்கள். அவருக்கு திருமண தடைகள் நீங்க கோவில் கோவிலாக சென்று வருகிறார்கள். அனுஷ்காவையே திருமணம் செய்து கொள்ளுமாறு பிரபாஸிடம் அவரின் ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











