பிரபாஸ் படத்தில் பணியாற்றியவர் உயிரிழப்பு.. படப்பிடிப்பு ரத்து.. விபத்து நடந்தது எப்படி?
ஹைதராபாத்: நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ஃபௌசி, இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்புக்காக சென்று கொண்டு இருந்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தது மொத்த படக்குழுவினரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இது மட்டும் இல்லாமல், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்தில் மேலும் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையில் இருந்த தடுப்புக் கற்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி இருக்கையில் படத்தின் படப்பிடிப்பு தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் காவல்துறையினர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும், உயிரிழந்தவரின் ஆத்மாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளனர். ஆனாலும் தயாரிப்பு நிறுவனம் இந்த விபத்து தொடர்பாக அவர்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க முன்வர வேண்டும் என்று படக்குழுவுக்கு இணையவாசிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பாதுகாப்பு: இந்த விபத்திற்குப் பிறகு, படப்பிடிப்புத் தளத்திலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை தயாரிப்பு நிறுவனம் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்புக்காக சென்று கொண்டிருக்கும் போது ஏற்பட்ட இந்த விபத்தால், தங்களுடன் பணியாற்றிக்கொண்டு இருந்த சக பணியாளர் மறைந்தது படக்குழுவினருக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அடுத்து படப்பிடிப்பு தொடங்கும் நாளில் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இழப்பீடு: இது மட்டும் இல்லாமல், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இழப்பீடு வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தி ராஜா சாப். இந்த படத்தில் நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரித்தி குமார், சஞ்சய் தத் மற்றும் போமன் ராணி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஜனவரி மாதம் பொங்கலில் வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் படு தோல்வியைச் சந்தித்தது. இவரது நடிப்பில் அடுத்து, ஸ்பிரிட் படம் உருவாக உள்ளது. இந்த படத்தை சந்தீப் ரெட்டி வன்கா இயக்கவுள்ளார்.


Click it and Unblock the Notifications