என்ன சொல்றீங்க நடிகர் பிரபாஸுக்கு உடல் நலக் குறைவா? உண்மையை உடைத்து சொன்ன நெருங்கிய நண்பர்!
ஹைதராபாத்: இந்தியாவின் டார்லிங் நடிகராக பார்க்கப்படும் நடிகர் பிரபாஸ் தொடர்ந்து அயராது ஷூட்டிங் செய்து வருவதால் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன.
ராதே ஷ்யாம், சலார், ஆதிபுருஷ், தீபிகா படுகோன் உடன் ஒரு படம் என படு பிசியாக கேப் இல்லாமல் உழைத்து வருகிறார் நடிகர் பிரபாஸ்.
இந்நிலையில், வைரலாக பரவும் தகவல் குறித்து அவரது நெருங்கிய நண்பரும் நகைச்சுவை நடிகருமான ஸ்ரீனு உண்மையை உடைத்து சொல்லி உள்ளார்.

1200 கோடி முதலீடு
நடிகர் பிரபாஸை நம்பி 1200 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களின் பட்ஜெட்டும் குறைந்தது 200 கோடி முதல் 350 கோடிக்கும் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பாகுபலி படம் போட்டுக் கொடுத்த பாதையை பிடித்துக் கொண்டு பிரம்மாண்ட ஹீரோவாக மாறி உள்ளார் பிரபாஸ்.

வியப்பில் பாலிவுட் நடிகர்கள்
பாலிவுட் நடிகர்கள் ஒரு படத்தை முடித்து விட்டு அடுத்த படத்தை தொடங்கவே பல ஆண்டுகள் யோசித்து வரும் நிலையில், அசால்ட்டாக இப்படி ஆயிரக் கணக்கான கோடி பட்ஜெட்டும் பல ஆயிரக்கணக்கான கோடி வசூலையும் குவித்து வரும் பிரபாஸை பார்த்து இயல்பாகவே பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

அயராத உழைப்பு
பல ஆயிரம் கோடி பிசினஸ் தன்னை சுற்றி நடப்பதால் சினிமா துறைக்கு தன்னால் முடிந்த உழைப்பை முடிந்த வரை கொடுக்க வேண்டும் என இரவு பகல் பாராமல் ஓயாது உழைத்து வருகிறாராம் நடிகர் பிரபாஸ். ஹைதராபாத், மும்பை, வெளிநாடுகள் என பறந்து பறந்து ஷூட்டிங் செய்து வருகிறார்.

பிரபாஸுக்கு என்ன ஆச்சு
இந்நிலையில், நடிகர் பிரபாஸுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தீயாய் பரவ ஆரம்பித்துள்ளன. ரெஸ்ட் எடுக்காமல் தொடர்ந்து வேலை பார்த்து வருவதால் அவரது உடல் ஆரோக்கியம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் சமீபத்தில் வெளியான அவரது சில எடை கூடிய புகைப்படங்கள் தான் என்கின்றனர்.

உண்மையை சொன்ன நண்பர்
இதுதொடர்பாக ஆன்லைன் போர்ட்டல் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் பிரபாஸின் நண்பரும் நகைச்சுவை நடிகருமான ஸ்ரீனி நடிகர் பிரபாஸ் இறைவன் அருளோடு ரொம்பவே ஆரோக்கியமாக இருக்கிறார். தேவையில்லாமல் சிலர் இதுபோன்ற வதந்திகளை பரப்புகின்றனர். ஒவ்வொரு படத்தின் காட்சிக்கு ஏற்றார் போல உடல் எடையை கூட்டியும் குறைத்தும் பிரபாஸ் நடித்து வருகிறார் என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











