சத்யராஜ் என் செல்ல கட்டப்பா... பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபாஸ் ருசிகரம்!

சென்னை : பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள படம் ராதே ஷ்யாம்.

வரும் 11ம் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் ரிலீசாக உள்ளது. ராதா கிருஷ்ணகுமார் படத்தை இயக்கியுள்ளார்.

யூவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

ராதே ஷ்யாம் படம்

ராதே ஷ்யாம் படம்

நடிகர் பிரபாஸ், பூஜா ஹெக்டே லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ராதே ஷ்யாம். இந்தப் படம் வரும் 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. யூவி கிரியேஷன்ஸ் படத்தை தயாரித்துள்ள நிலையில் தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை வெளியிடவுள்ளது. ராதா கிருஷ்ணகுமார் படத்தை இயக்கியுள்ளார்.

காதல் களத்தில் பிரபாஸ்

காதல் களத்தில் பிரபாஸ்

ஆக்ஷன் படங்களில் அதிகமாக நடித்துள்ள பிரபாஸ் இந்தப் படத்தில் காதல் களத்தை தேர்ந்தெடுத்துள்ளார். இன்னும் சில தினங்களில் படம் ரிலீசாக உள்ள நிலையில் சென்னையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படம் ரிலீசாக உள்ளது.

11ம் தேதி ரிலீஸ்

11ம் தேதி ரிலீஸ்

தமிழிலும் வரும் 11ம் தேதி படம் ரிலீசாக உள்ள நிலையில், சென்னையில் இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகர் சத்யராஜ், சிபிராஜ், உதயநிதி, தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி ஆகியோருடன் பிரபாஸ், பூஜா ஹெக்டே, இயக்குநர் ராதாகிருஷ்ணன், பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

செல்ல கட்டப்பா

செல்ல கட்டப்பா

நிகழ்ச்சியில் பேசிய படத்தின் நாயகன் பிரபாஸ், நடிகர் சத்யராஜ் தனது செல்ல கட்டப்பா என்று தெரிவித்துள்ளார். முதல் முறையாக சத்யராஜுடன் இணைந்து மிர்ச்சி படத்தில் நடித்ததாகவும் அது சூப்பர் டூப்பர் ஹிட்டானதாகவும் பிறகு பாகுபலி, தற்போது ராதே ஷ்யாமில் அருமையான கேரக்டரில் நடித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அருமையான காதல் கதை

அருமையான காதல் கதை

அருமையான காதல் கதையாக ராதே ஷ்யாம் உருவாகியுள்ளதாகவும், படத்தில் ஆக்ஷனும் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். படத்தின் நாயகன் மனோஜ் தான் என்றும் அவர் தன்னை மிகவும் அழகாக காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். படத்தின் விஷுவல் மிகவும் பாராட்டிற்கு உள்ளாகியுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இயக்குநரின் தைரியம்

இயக்குநரின் தைரியம்

படத்தில் பூஜா அழகாக இருப்பதாகவும் இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி வொர்க் அவுட்டாகியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். தன்னை வைத்து பிரமோத் லவ் ஸ்டோரி எடுத்துள்ளதாகவும், அதற்கு நிறைய தைரியம் வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். தன்னை எப்படி அவர் லவ் ஸ்டோரியில் யோசித்தார் என்று தெரியவில்லை என்றும் அவர் நகைச்சுவையுடன் கூறியுள்ளார்.

Recommended Video

3 வது படிச்சா பொண்ணு இப்போ எனக்கு Jodi|Suriya Speech in Etharkkum Thunindhavan Trailer launch Event
1970களின் கதை

1970களின் கதை

1970களில் ஐரோப்பாவில் நடக்கும் கதையாக ராதே ஷ்யாம் உருவாகியுள்ளது. படத்தில் கைரேகை நிபுணராக வித்தியாசமான கேரக்டரில் பிரபாஸ் நடித்துள்ளார். இத்தாலி, ஜார்ஜியா மற்றும் ஐதராபாத்தில் படம் எடுக்கப்பட்டுள்ளது. பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டேவிற்கு இடையிலான காதல் காட்சிகள் டீசர் உள்ளிட்டவற்றில் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X