இந்த அனுஷ்காவிடம் ஒரேயொரு பிரச்சனை தான்: பிரபாஸ்
Recommended Video
ஹைதராபாத்: அனுஷ்காவிடம் ஒரேயொரு பிரச்சனை தான் என்று பிரபாஸ் மனம் திறந்து தெரிவித்துள்ளார்.
பாகுபலி படத்தில் நடித்தபோது அனுஷ்காவுக்கும், பிரபாஸுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக பேச்சு கிளம்பியது. அந்த பேச்சு இன்னும் அடங்கியபாடில்லை. பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் நடித்துள்ள சாஹோ படம் நாளை ரிலீஸாக உள்ளது.

அந்த படத்தை விளம்பரம் செய்ய சென்ற இடத்தில் எல்லாம் பிரபாஸிடம் அனுஷ்கா பற்றி கேட்கப்பட்டது. அவரும் நானும், அனுஷ்காவும் வெறும் நண்பர்கள் மட்டுமே என்றார். நாங்கள் காதலிபதாக இருந்தால் இந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு முறை கூடவா யாரும் எங்களை ஜோடியாக வெளியே பார்க்காமல் இருப்பார்கள் என்று கேள்வி எழுப்பினார் பிரபாஸ்.
இந்நிலையில் பிரபாஸ் தெலுங்கு தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,
அனுஷ்கா மிகவும் அழகானவர். நல்ல உயரம். ஆனால் அவரிடம் ஒரேயொரு பிரச்சனை உள்ளது. அவரின் செல்போனுக்கு கால் செய்தால் உடனே எடுக்க மாட்டார் என்றார்.
அனுஷ்கா பிரபாஸுக்கு விலை உயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக அளித்தார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் அனுஷ்காவுக்கு பரிசளிப்பதாக இருந்தால் எதை கொடுப்பீர்கள் என்றி பிரபாஸிடம் கேட்டதற்கு கைக்கடிகாரம் என்றார்.
காதல் இல்லை என்று பிரபாஸ் தான் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். ஆனால் அனுஷ்கா இது பற்றி இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. அவர் தன் பாட்டுக்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே அனுஷ்காவுக்கு அவர் வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சாஹோ ரிலீஸுக்கு பிறகு பிரபாஸின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகுபலி படத்தில் பிரபாஸ் அனுஷ்காவுக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்திருந்தார். அந்த காட்சியை தமிழில் சரியாக காட்டவில்லை என்று ரசிகர்கள் அப்பொழுது புலம்பினார்கள். இந்நிலையில் ஹீரோயினுக்கு முத்தம் கொடுக்கும் காட்சியில் நடிப்பது அசவுகரியமாக உள்ளதாக பிரபாஸ் தெரிவித்துள்ளார். தனக்கு கூச்ச சுபாவம் அதிகம் என்றும், யாருடனும் எடுத்த எடுப்பிலேயே பேசி விட மாட்டேன் என்றும் பிரபாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











