Don't Miss!
- News
வாட்ஸ்அப்ல கட்டுக்கதைகளை சொல்லுவாங்க.. நம்பாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அனுஷ்காவுக்கும் உங்களுக்கும்.. திரும்ப திரும்ப அதே கேள்வி.. கடுப்பான பிரபாஸ் !
சென்னை : திரும்ப திரும்ப அதே கேள்வியை கேட்டு வருவதால் சற்று எரிச்சலடைவதாக நடிகர் பிரபாஸ் தெரிவித்துள்ளார்.
பிரபாஸ் நடித்த பான் இந்திய படமான ராதே ஷ்யாம் எதிர்பார்த்த வெற்றி பெறாமல் தோல்வி திரைப்படமாக அடைந்தது.
கே.ஜி.எஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.
நடிகை பலாத்கார வழக்கு.. 11,161 வீடியோக்கள் மீட்பு.. திகைத்துப் போன அதிகாரிகள்.. சிக்கலில் நடிகர்!

பிரபாஸ்
பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய நடிகர் பிரபாஸ். நடிகர் பிரபாஸிற்கு தற்போது 42வயதாகிறது. பாகுபலி படப்பிடிப்பின் போது 6 ஆயிரம் பெண்கள் அவரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து இருந்தனர். ஆனால், அனைத்து பெண்களின் கோரிக்கையும் பிரபாஸ் நிராகரித்தார்.

அனுஷ்காவுடன் கிசுகிசு
பாகுபலி படத்தில் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஷெட்டி கேமிஷ்டிரி பக்காவாக இருக்கும். அந்த நேரத்தில் இவர்கள் இருவரின் பெரும் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. அதேபோல, சாஹோ படத்திலும் அனுஷ்காவின் பெயரை பிரபாஸ் சிபாரிசு செய்திருந்தார். அனுஷ்கா, அப்போது குண்டாக இருந்ததால் அந்த கதாபாத்திரம் ஷ்ரத்தா கபூருக்கு சென்றது.

எப்போது திருமணம்
இந்நிலையில், நடிகர் பிரபாஸ் அளித்துள்ள பேட்டியில், பல ரசிகர்கள் உங்களிடம், திரும்ப திரும்ப கேட்கும் ஒரே கேள்வி எப்போது திருமணம் என்று இந்த கேள்வியை ரசிகர்கள் கேட்கும் உங்களுக்கு எரிச்சலாக இருக்கிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது. ரசிகர்கள் என் மீது உள்ள அக்கறையில்தான் கேட்கிறார்கள். இது பொதுவான இயல்பான அனைவரும் கேட்கும் கேள்விதான்.

திரும்ப திரும்ப அதேகேள்வி
அனுஷ்கா குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரபாஸ், நானும் அனுஷ்காவும் நண்பர்கள் மட்டுமே. பாகுபலி படத்திற்கு பிறகு அனுஷ்காவை காதலிக்கிறீர்களா? என தொடர்ந்து கேள்விகள் வருவதால், சற்று எரிச்சலடைவதாக பிரபாஸ் கூறினார். மேலும், திருமணம் நடக்கும் போது நடக்கும் அந்த நேரத்தில் கண்டிப்பாகத் அனைவருக்கும் தெரிவிப்பேன் என்றும் நடிகர் பிரபாஸ் கூறினார்.