twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பூஜா ஹெக்டேவின் நடிப்பை பார்த்து அப்படியே ஷாக் ஆயிட்டேன்... பிரபாஸ் வெளிப்படை

    |

    ஐதராபாத் : நடிகர் பிரபாசுடன் பூஜா ஹெக்டே ஜோடி சேர்ந்துள்ள படம் ராதே ஷ்யாம்.

    படத்தின் இன்னுமொரு பாடல் காட்சி மட்டுமே ஷூட்டிங்கில் பாக்கி உள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் படத்தின் ரஷ்ஷை பார்த்த நடிகர் பிரபாஸ் நாயகி பூஜா ஹெக்டேவின் பர்பார்மென்சை பார்த்து வியப்படைந்ததாகவும் உடனடியாக பாராட்டுக்களை தெரிவித்ததாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

    விஜய்யுடன் ஜோடி

    விஜய்யுடன் ஜோடி

    தன்னுடைய கைவசம் அதிகமான படங்களை வைத்துள்ளார் நடிகை பூஜா ஹெக்டே. பாலிவுட்டில் ரன்வீர் சிங்குடன் சர்க்கஸ், சல்மான் கானுடன் ஒரு படம், சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா, மற்றும் அகில் அக்கினேனியுடன் ஒரு படம், தளபதி 65ல் விஜய்யின் ஜோடி என்று அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

    பிரபாசுடன் ஜோடி

    பிரபாசுடன் ஜோடி

    இந்நிலையில், பாகுபலி ஹீரோ பிரபாசுடன் தற்போது ராதே ஷ்யாம் படத்தில் நடித்து வருகிறார். படத்தில் இன்னும் ஒரு பாடல் மட்டுமே ஷூட் செய்ய வேண்டியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தற்போதுள்ள நிலை ஓரளவிற்கு சரியானவுடன் அந்த பாடல் காட்சிகள் ஐதராபாத்திலேயே எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    பூஜா ஹெக்டே சிறப்பு

    பூஜா ஹெக்டே சிறப்பு


    கடந்த ஆண்டில் இந்த படத்தின் படப்பிடிப்பு இத்தாலி உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட நிலையில், சர்க்கஸ் காட்சிகளுக்காக உயரமான இடத்தில் இருந்து தாவி டூப் இல்லாமல் படப்பிடிப்பில் பூஜா ஹெக்டே நடித்து கொடுத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் எடுக்கப்பட்ட காட்சிகளை படத்தின் ஹீரோ பார்த்துள்ளார்.

    பிரபாஸ் வியப்பு

    பிரபாஸ் வியப்பு

    படத்தில் பூஜாவின் நடிப்பை பார்த்து பிரபாஸ் வியப்படைந்ததாகவும் அவரை தொடர்ந்து பாராட்டியதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் ரசிகர்களுக்கும் அவருடைய நடிப்பு மற்றும் அவர் வரும் காட்சிகள் மிகவும் பிடிக்கும் என்று அவர் தெரிவித்ததாகவும் கூறியுள்ளனர்.

    English summary
    Prabhas just kept praising her, talking about how spectacular her performance
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X