»   »  பாகுபலி ஹிட்டானதையடுத்து சம்பளத்தை உயர்த்திய பிரபாஸ்: நியாயம் தானே!

பாகுபலி ஹிட்டானதையடுத்து சம்பளத்தை உயர்த்திய பிரபாஸ்: நியாயம் தானே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாகுபலி 2 பட வெற்றியை அடுத்து பிரபாஸ் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டாராம்.

தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து 3 ஹிட் படங்களை கொடுத்த நிலையில் பிரபாஸுக்கு பாகுபலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களில் நடிப்பதற்காக பிரபாஸ் கடந்த 5 ஆண்டுகளாக வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை.


Prabhas is costly after Baahubali 2

கடந்த 28ம் தேதி வெளியான பாகுபலி 2 படம் ரூ. 1000 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வெற்றியை அடுத்து பிரபாஸ் தனது சம்பளத்தை ரூ. 5 கோடி உயர்த்தியுள்ளாராம்.


பாகுபலி படங்களுக்கு முன்பு அவர் படம் ஒன்றுக்கு ரூ. 20 கோடி முதல் ரூ. 25 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார். பாகுபலி மெகா ஹிட் படங்களை கொடுத்ததை அடுத்து ரூ. 5 கோடி கூடுதல் சம்பளம் கேட்பதில் தவறு இல்லை என்று நினைக்கிறாராம் பிரபாஸ்.


தற்போது பிரபாஸுக்கு இந்தியா முழுவதும் மார்க்கெட் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Prabhas has increased his salary after Rajamouli's magnum opus Baahubali 2 has collected Rs. 1000 crore worldwide.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil