என்னது, கேஜிஎப் 2- ல் இணைகிறாரா பிரபாஸ்?... எதுக்குன்னு பாக்கலாமா?

பெங்களூரு : கேஜிஎப் 2 படத்தை இயக்கியுள்ள பிரஷாந்த் நீல் இயக்கத்தில் அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் படம் சலார். இந்த இரண்டு படங்களுமே மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் இந்த இரு படங்களும் தற்போது கூட்டணி அமைக்கவுள்ளன.

வரவேற்பை பெற்ற கேஜிஎப்

வரவேற்பை பெற்ற கேஜிஎப்

கேஜிஎப் படம் வெளியாகி சர்வதேச அளவில் சிறப்பான வரவேற்பை பெற்றது. வழக்கமான கேங்ஸ்டர் படம்தான் என்றாலும் மிரட்டலான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் படத்தை வித்தியாசமாக காட்டியது. யஷ் ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.

14ம் தேதி ரிலீசாகும் கேஜிஎப் 2

14ம் தேதி ரிலீசாகும் கேஜிஎப் 2

இந்நிலையில் வரும் 14ம் தேதி சர்வதேச அளவில் கேஜிஎப் சாப்டர் 2 படம் ரிலீசாக உள்ளது. இந்திய அளவில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் படம் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்திலும் யஷ் தான் ஹீரோ. அவருக்காகவே இந்தப் படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

மிரட்டலான இயக்கம்

மிரட்டலான இயக்கம்

மேலும் படத்தை ரசிகர்கள் பார்க்க மற்றுமொரு முக்கியமான காரணம் இயக்குநர் பிரஷாந்த் நீல். அவரும் காட்சிக்கு காட்சி மிரட்டலான படத்தை கொடுத்துள்ளார். சமீபத்தில் வெளியான பாடல்கள் மற்றும் ட்ரெயிலரில் இதை உணர முடிந்தது. ட்ரெயிலர் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழில் வெளியிடும் ட்ரீம் வாரியர்

தமிழில் வெளியிடும் ட்ரீம் வாரியர்

தமிழகத்தில் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளார். படத்தின் நாயகனாக யஷ் நடிக்க அவருக்கு ஜோடியாகியுள்ளார் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர்களுடன் சஞ்சய்தத், ரவீணா டண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராமச்சந்திர ராஜூ உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

சலார் படத்தை இயக்கும் பிரஷாந்த் நீல்

சலார் படத்தை இயக்கும் பிரஷாந்த் நீல்

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் சலார் படத்தை இயக்கி வருகிறார் பிரஷாந்த் நீல். இந்தப் படத்தில் பிரபாசிற்கு ஜோடியாகியுள்ளார் ஷ்ருதிஹாசன். இந்தப் படத்தின் 30 சதவிகித சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக பிரஷாந்த் நீல் தெரிவித்துள்ளார். மேலும் வரும் மே மாதத்தில் மீண்டும் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வன்முறை தூக்கலான கேரக்டர்

வன்முறை தூக்கலான கேரக்டர்

இந்தப் படத்தில் இதுவரை இல்லாதவகையில் மிகவும் வன்முறை காட்சிகளில் பிரபாஸ் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபாசிற்கு பொருந்தும் கதையையே தான் தேர்வு செய்துள்ளதாக படத்தின் இயக்குநர் பிரஷாந்த் நீல் தெரிவித்துள்ளார். இந்தப் படம் புதிதான கதை என்றும் எந்தப் படத்தின் ரீமேக்கும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கேஜிஎப் 2 படத்துடன் இணையும் பிரபாஸ்

கேஜிஎப் 2 படத்துடன் இணையும் பிரபாஸ்

வரும் 14ம் தேதி கேஜிஎப் சாப்டர் 2 படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில், அதன் இடையில் பிரபாசின் சலார் படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் திரையிடப்பட உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரசிகர்களும் டபுள் ட்ரீட் காத்துள்ளதாக அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X