புஜ்ஜி பஜ்ஜியாகிடும் போல இருக்கே.. பிரபாஸின் கல்கி க்ளிம்ப்ஸை கலாய்க்கும் நெட்டிசன்கள்.. தேறுமா?

ஹைதராபாத்: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், பசுபதி, திஷா பதானி மற்றும் தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள கல்கி ஏடி 2898 திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது.நேற்று இந்தப் படத்திற்காக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள புஜ்ஜி காரில் பிரபாஸ் அசத்தல் என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் முன் தோன்றி பேசினார்.

புஜ்ஜி மற்றும் பைரவாவை அறிமுகப்படுத்தும் விழாவில் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்றனர். கோலிவுட் நடிகர் நானி உள்ளிட்ட பிரபலங்கள் புஜ்ஜி கார் டீசரை நேற்று வெளியிட்டனர்.

Prabhas Kalki 2898 AD gets huge troll after Bujji car glimpse out

ஹாலிவுட் படங்களான ஸ்டார் வார்ஸ் மற்றும் டூன் உள்ளிட்ட படங்களின் சாயல் அப்பட்டமாக தெரிவதாக டோலிவுட் ரசிகர்கள் முதல் பாலிவுட் ரசிகர்கள் வரை புஜ்ஜி க்ளிம்ப்ஸை கலாய்த்து வருகின்றனர்.

புஜ்ஜி காருக்கு கீர்த்தி சுரேஷ் வாய்ஸ்: நாக் அஸ்வின் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோரை வைத்து நடிகையர் திலகம் திரைப்படத்தை இயக்கினார். கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக அந்த படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் பிரபாஸை வைத்து இயக்கியுள்ள கல்கி படத்திலும் கீர்த்தி சுரேஷின் பங்கு இருக்க வேண்டும் என நினைத்த இயக்குநர் புஜ்ஜி காருக்கான வாய்ஸை கீர்த்தி சுரேஷை கொடுக்க வைத்துள்ளார்.

செம காமெடி: எதிர்காலத்தில் நடக்கும் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. ஆனால் படத்தின் மேக்கிங்கை பார்த்த ரசிகர்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன்னதாக பார்த்த ஸ்டார் வார்ஸ் படம் தான் நினைவுக்கு வருகிறது. புஜ்ஜி மற்றும் பைரவா இருவரது கான்வர்சேஷன் செம காமெடியாக உருவாக்கப்பட்டுள்ளது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அயலான் படத்துக்கு சித்தார்த் குரல் கொடுத்தது போல இந்த புஜ்ஜி காருக்கு கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார்.

ஹைப்பே போயிடுச்சு: அந்த டீசரை பார்த்த ரசிகர்கள் இதையெல்லாம் ஹாலிவுட்டே இப்போ நிறுத்திடுச்சு நீங்க ஏன் ஹாலிவுட் ஸ்டைலில் படம் கொடுக்கிறேன் என பல கோடியை நாசம் பண்ணி வருகிறீர்கள் என்றும் க்ளிம்ப்ஸ் முழுக்கவே பிரபாஸ் முகத்தில் எந்த ஒரு இடத்திலும் ரியாக்ஷன் இல்லை என்றும் அவரது காஸ்ட்யூம் முதல் அத்தனையும் சொதப்பலாக இருப்பதாக பிரபாஸின் ஹேட்டர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Prabhas Kalki 2898 AD gets huge troll after Bujji car glimpse out

ஹாலிவுட்டுக்கே டஃப்: அதே நேரத்தில் பிரபாஸ் ரசிகர்கள் இந்தியாவிலிருந்து இப்படி ஒரு தரமான மேக்கிங் உருவாகும் என ஹாலிவுட் பிரபலங்களே நினைத்திருக்க மாட்டார்கள் என்றும் பிரபாஸ் படம் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான படமாக நிச்சயம் இருக்கும் என்றும் கண்டிப்பாக 1000 கோடி வசூலை அசால்டாக கல்கி ஏடி2898 திரைப்படம் தட்டித் தூக்கும் என கொண்டாடி வருகின்றனர்.

வித்தியாசமான கார்: புஜ்ஜி கார் சாலையில் மட்டும் பயணிக்கும் காராக உருவாகாமல் ஆகாயத்தில் பறக்கும் காராகவும் உருவாக்கப்பட்டுள்ளது. வேற்று கிரகத்தில் நடக்கும் கதையாக இந்த படம் உருவாகிறதா? அல்லது உலகமே வேற்று கிரகம் போல 2898 ஏடியில் மாறிவிடுவதால் அங்கே நிலவும் கதையாக இந்த படம் இருக்குமா என ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஜூன் 27ம் தேதி கல்கி 2898 ஏடி திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. இதுவரை கமல்ஹாசன் லுக் மட்டும் ரிவீல் செய்யப்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X