ஜப்பானில் துவக்க நாள் வசூலில் மாஸ் காட்டிய கல்கி 2898 ஏடி.. முதல் 10 படங்களில் பிரபாஸ் ஆதிக்கம்!
சென்னை: இந்திய அளவில் பான் இந்தியா படங்களாக வெளியாகும் அனைத்து படங்களும் சர்வதேச அளவிலும் ரிலீஸ் செய்யப்பட்டு வரவேற்பிலும் வசூலிலும் வெளிநாட்டு ரசிகர்களையும் வசீகரித்து வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் விஜய் சேதுபதியின் மகாராஜா படம் சீனாவில் வெளியாகி ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குள்ளாகி 80 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்திருந்தது.
படத்தை விரைவில் ஜப்பானிலும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக ரஜினிகாந்த் உள்ளிட்ட இந்திய நடிகர்களின் படங்கள் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வெளியாகி மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக ரஜினிகாந்திற்கு முத்து படக்காலத்திலிருந்தே ஜப்பானில் ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

கல்கி 2898 ஏடி படம்: நடிகர் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கல்கி 2898 ஏடி படம் கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசானது. இந்திய அளவில் பான் இந்தியா படமாக வெளியான இந்தப் படம் 1000 கோடி ரூபாய்களை தாண்டி மாஸ் காட்டியது. பிரபாஸின் கேரியர் பெஸ்ட் படங்களில் ஒன்றாக அமைந்த இந்தப் படம், பாகுபலி 2 படத்தை தொடர்ந்து பிரபாஸ் கேரியரில் அதிக வசூலை ஈட்டிய படமாக அமைந்தது. இந்தப் படம் நேற்றைய தினம் ஜப்பானில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானில் சிறப்பான துவக்க நாள் வசூல்: படம் முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்துள்ளது. இதையடுத்து ஜப்பானில் வெளியாகி துவக்க நாளிலேயே சிறப்பான வசூலை பெற்ற இந்திய படங்களில் இந்தப் படம் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. முன்னதாக பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படத்தின் வசூலை இந்தப் படம் தாண்டியுள்ளது. பாகுபலி 2 படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து படங்களை கொடுத்து வருகிறார் பிரபாஸ். இவரது படங்கள் ஏராளமான ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவழைக்கும் வகையில் அடுத்தடுத்து அமைந்த நிலையில், கல்கி 2898 ஏடி படமும் அந்த வரிசையில் இணைந்தது.
7 ஆண்டுகளாக ஆதிக்கம்: இதனிடையே கடந்த 7 ஆண்டுகளாக பிரபாசின் அடுத்தடுத்த படங்கள் ஜப்பானிலும் மாஸ் ஹிட்டடித்தது. இந்த வரிசையில் தற்போது கல்கி 2898 ஏடி படமும் இணைந்துள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ஜப்பானில் வெளியான இந்திய படங்களில் சிறப்பான துவக்கத்தை பெற்ற படங்களில் 3வது இடத்தில் இடம்பெற்றுள்ளது. பதான், சலார், ஜவான் படங்களின் துவக்க நாள் வசூலையும் இந்தப் படம் முறியடித்துள்ளது. முதல் இரு இடங்களில் ஆர்ஆர்ஆர் மற்றும் சாஹோ படங்கள் உள்ள நிலையில் மூன்றாவது இடத்தில் கல்கி படத்தின் முதல் நாள் வசூல் காணப்படுகிறது.
சூப்பர் கலெக்ஷனில் பிரபாஸ்தான் டாப்: குறிப்பாக ஜப்பானில் இதுவரை வெளியான இந்திய படங்களின் முதல் நாள் வசூலில் பிரபாசின் சாஹோ, கல்கி 2898 ஏடி, சலார், பாகுபலி 2 ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன.இதன்மூலம் பிரபாஸின் அதிகமான படங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்திய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவிலும் குறிப்பாக ஜப்பானிலும் தான்தான் டாப் என்பதை இதன்மூலம் பிரபாஸ் நிரூபித்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக ஜப்பானில் அவரது ஆதிக்கம் அதிகமாக உள்ள நிலையில் அவரது அடுத்தடுத்த படங்களும் இதை அப்படியே தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











