ஆந்திராவை தவிர்த்து கல்கி படத்துக்கு ஹைப்பே இல்லையா?.. புக் மை ஷோவில் எல்லாமே பச்சையா இருக்கே!
சென்னை: பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 ஏடி திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், முதல் நாள் வசூல் 200 கோடி ரூபாய் வரும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் ரியாலிட்டி என்னவென்றால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை தவிர்த்து கல்கி படத்துக்கு இந்தியா முழுவதும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லை என்கின்றனர்.
ஜூன் 27-ஆம் தேதி உலகம் முழுவதும் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள கல்கி திரைப்படம் வெளியாகிறது. சுமார் 600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த பாடத்தில் பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி நடித்துள்ளனர்.

அதேபோல கோலிவுட்டை சேர்ந்த கமல்ஹாசன், பசுபதி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். மலையாள ரசிகர்களை கவரும் விதமாக ஷோபனாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளனர். ஆனால், இந்திய ரசிகர்கள் இதுவரை கல்கி படத்துக்கு அதிக ஆர்வத்தை செலுத்தவில்லை என்பது புக் மை ஷோவில் நாளைய தினம் கல்கி படத்திற்கு எந்த அளவுக்கு டிக்கெட் புக்கிங் நடந்து இருக்கிறது என்பதைப் பார்த்தாலே தெரிய வருகிறது.
தெலுங்கு ரசிகர்கள் மட்டுமே: நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள கல்கி படம் நாளை வெளியாகிறது. அந்தப் படத்தை பார்க்க தெலுங்கு ரசிகர்கள் மட்டுமே இதுவரை ஆர்வம் செலுத்தி வருகின்றனர் என்கிற ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன. மற்ற மொழி ரசிகர்கள் கல்கி படத்துக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாமே பச்சை நிறம்: புக் மை ஷோவில் ஹைதராபாத் நகரத்தை தாண்டி மும்பை, டெல்லி, சென்னை, கொச்சி, கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூர் என எந்த நகரத்தை க்ளிக் செய்து டிக்கெட் புக்கிங்கை செக் செய்து பார்த்தாலும், அனைத்து இடங்களிலும் தியேட்டர்களில் எல்லா டிக்கெட்டுகளும் காலியாகவே கிடைக்கின்றன. பச்சை நிறத்தில் தான் தியேட்டர்களில் அனைத்து காட்சிகளும் இதுவரை உள்ளன.
பாசிட்டிவ் விமர்சனம் வந்தால்தான்: கல்கி படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் இந்திய அளவில் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மட்டுமே திரையரங்குகள் ஹவுஸ்ஃபுல்லாக மாறியுள்ளன. ஓவர்சீஸில் இந்த படத்துக்கு ஓரளவுக்கு வரவேற்பு உள்ளது. ஆனால், படம் வெளியான பின்னர் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தால் மட்டுமே எதிர்பார்த்த வெற்றியையும் வசூல் வேட்டியில் நடத்தும் என்றும் இல்லை என்றால் மிகப்பெரிய சரிவையும் இழப்பையும் கல்கி 2898 ஏடி சந்திக்கும் எனக் கூறுகின்றனர்.

மல்டி ஸ்டார் தேர்வில் சொதப்பல்: மற்ற மாநிலங்களில் இருந்து நடிகர்கள் நடித்தாலும் பாக்ஸ் ஆபிஸ் நடிகர்களை தேர்வு செய்து படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தால் தான் அந்த நடிகர்களின் ரசிகர்கள் தியேட்டருக்கு ஆட்களை கொண்டு வருவார்கள் என்றும் மல்டி ஸ்டார் தேர்வில் பெரும் சொதப்பல் நடைபெற்றதே இப்படி டிக்கெட் புக்கிங் பச்சை நிறமாக இருக்க காரணம் என்றும் கூறுகின்றனர். மேலும், நடிகர் பிரபாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் சென்னைக்கு வந்து எந்தவொரு புரமோஷனையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











