Adipurush Troll: அப்படியே அந்த மீசையையும் மாத்திருக்கலாம்.. பிரபாஸ் லுக் மோசம்.. ஆதிபுருஷ் ட்ரோல்!

சென்னை: பிரபாஸ் நடிப்பில் உருவாகி உள்ள ஆதிபுருஷ் படத்தின் ட்ரெய்லர் சற்று முன் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியானது.

லைவ் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி உள்ள ராமாயணக் கதை திரைப்படம் ஆரம்பத்தில் அதன் அனிமேஷனுக்காக கடுமையாக ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், தற்போது அந்த விஷயத்தை படக்குழுவினர் மேம்படுத்தி புதிய ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர்.

புதிய ட்ரெய்லரை பார்த்த பிரபாஸ் ரசிகர்கள் கூஸ்பம்ஸ் என கொண்டாடி வரும் நிலையில், பாலிவுட் நெட்டிசன்கள் பலர் பிரபாஸின் மீசை லுக் மாற்றப்படாமல் அப்படியே இருப்பது ராமர் ஃபீலிங்கையே கொடுக்கவில்லை என ட்ரோல் செய்து வருகின்றனர்.

Prabhas look still not good and why they hiding Ravanas look netizens trolled Adipurush Trailer

ஆதிபுருஷ் ட்ரெய்லர் ரிலீஸ்: பாலிவுட்டில் அஜய் தேவ்கன், சைஃப் அலி கானை வைத்து தானாஜி படத்தை இயக்கி ஓம் ராவத் அதே போல பிரம்மாண்ட படமாக ஆதிபுருஷ் படத்தை இயக்குவார் என எதிர்பார்த்த பிரபாஸ் ரசிகர்களுக்கு கடைசியில் இந்த படம் லைவ் அனிமேஷன் திரைப்படமாக உருவானதும் மிகப்பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது.

மேலும், ஆரம்பத்தில் வெளியான டீசரை பார்த்த ரசிகர்கள் ராவணன், அனுமன் எல்லாம் தீவிரவாதிகள் போல உள்ளனர் என்றும் மீசை வைத்துக் கொண்டு பிரபாஸ் எந்த ரோலில் நடித்துள்ளார் என விளாசி எடுத்தனர். இந்நிலையில், சிஜி குறைகளை சற்றே சரி செய்து விட்டு புதிய ட்ரெய்லரை வெளியிட்டுள்ள படக்குழு அடுத்த மாதம் ஆதிபுருஷை பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளது.

மீசை மாறலையே: இந்நிலையில், புதிய ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் இது அனிமேஷன் படம் மாதிரி எல்லாம் தெரியவில்லை. அப்படியே பிரபாஸ், கிருத்தி சனோன், சைஃப் அலி கான் நடித்திருப்பது போலவே தெரிவதாக பாராட்டி வருகின்றனர்.

ஆனால், இன்னொரு பக்கம் பாலிவுட் நெட்டிசன்கள் பலர் பிரபாஸின் தோற்றம் மாற்றப்படாமல் அப்படியே உள்ள நிலையில், ராமர் ஃபீலிங்கே வரவில்லை என்றும் அட்லீஸ்ட் சிஜியில் அந்த மீசையையும் எடுத்திருக்கலாமே என கலாய்த்து வருகின்றனர்.

Prabhas look still not good and why they hiding Ravanas look netizens trolled Adipurush Trailer

ராவணனை சரியா காட்டல: முழுக்க முழுக்க பிரபாஸ், கிருத்தி சனோன், அனுமனாக நடித்த தேவ்தத்தா நாக் உள்ளிட்ட நடிகர்களையே காட்டுகின்றனர் என்றும் ஒரு சில காட்சிகளில் மட்டும் ராவணானக நடித்துள்ள சைஃப் அலி கானை காட்டினாலும் அவரது முகத்தை சரியாகவே காட்டவில்லை என்றும் டீசரில் இடம்பெற்ற அந்த பத்து தல சீனை எப்படி மாற்றினார்களா? இல்லை அப்படியே இருக்கிறதா? என்பது தெரியவில்லை என கிண்டல் செய்து வருகின்றனர்.

நடிகர் பிரபாஸின் ரசிகர்கள் முன்பை விட பல மடங்கு சிறப்பான ஹார்ட்வொர்க் தெரிகிறது. படம் நிச்சயம் பாக்ஸ் ஆபிஸில் மிரட்டும் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்த சாஹோ, ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்கள் சொதப்பிய நிலையில், ஆதிபுருஷ் வெற்றியை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X