வெளியானது பாகுபலி நாயகன் பிரபாஸின் 'சாஹோ' ஃபர்ஸ்ட் லுக்! #Saaho #HBDPrabhas
சென்னை: பாகுபலி நாயகன் பிரபாஸின், மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட சாஹோ படத்தின் முதல் தோற்றப் போஸ்டர், அவரது பிறந்த நாளான இன்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பிரபாஸின் ரசிகர்களுக்கான விருந்தாக இந்தப் போஸ்டர் வெளியானது.

ஆளரவமற்ற ஒரு சாலையில் முகத்தை போர்வையால் மூடியபடி இறுக்கமாக பிரபாஸ் நடந்து செல்வது மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டரே படத்தின் ஜானரைச் சொல்லிவிடுகிறது. இது ஒரு பக்கா ஆக்ஷன் க்ரைம் படம்.
பாகுபலி 2 வெளியாகி 6 மாதங்கள் ஆன நிலையில், பிரபாஸின் அடுத்த படமான சாஹோ போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் பிரபாஸ் ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். சுஜீத் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகிறது.
பாகுபலி போல பிரமாண்டமாக அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











