பிரபாஸ் வீட்டில் கிராண்ட் செலிப்ரேஷன்.. க்ரீன் சிக்னல் கொடுத்துட்டாராம்.. மாப்பிள்ளைக்கு வெட்கத்தை பாருங்க

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகில் மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலராக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபல நடிகருக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறதாம். முன்னதாக பிரம்மாண்ட படத்தில் தன்னுடன் நடித்த நடிகையை காதலிப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. பிறகு இருவரும் நட்பாகத்தான் பழகி வருவதாக தெரிவித்தனர். முரட்டு சிங்கிளாக சுத்தி வந்துகொண்டிருக்கும் இவருக்கு வீட்டில் கால்கட்டு போட முடிவெடுத்துவிட்டனர். பெண் யார் என தெரிந்துகொள்வதில் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வாங்க தெரிந்துகொள்வோம்.

பாகுபலி படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் இந்திய அளவில் பிரபலம் அடைந்துள்ளார். அதேபோன்று அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்களும் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான கல்கி திரைப்படம் 1000 கோடி வசூலை ஈட்டியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அணிமல் பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ஸ்பிரிட் படத்தில் நடித்து வருகிறார். சினிமா சினிமா என்று பிஸியாக சுத்தி கொண்டிருக்கும் பிரபாஸிடம் பிரபலங்கள் அனைவரும் கேட்கும் ஒரே கேள்வி திருமணம். இன்னும் முரட்டு சிங்கிளாக சுத்தி கொண்டிருந்தால் எப்படி என ஓப்பனாக கலாய்க்க தொடங்கிவிட்டனர்.

prabhas-marry-to-telengana-bussinessmans-daughter

முரட்டு சிங்கிள் பிரபாஸ்: மழை படத்தில் நடித்ததன் மூலம் கோபிசந்தும், பிரபாஸூம் நண்பர்களாக இருக்கின்றனர். கோபிசந்த் நடிக்கும் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டும் பிரபாஸ் உற்சாகப்படுத்தி வருவார். சமீபத்தில் பாலய்யா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது இவரது திருமணம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு கோபிசந்தும் அவரிடம் அந்த கேள்வியை கேட்க முடியாமல் திணறினார். அதற்கு பிரபாஸூம் திருமணம் பண்ண பயமா இருக்கு சார் என்று ஓப்பனாகவே பேசினார். அதுக்காக இப்படி முரட்டு சிங்கிளாகவே இருக்கலாம் என்று முடிவெடுத்திட்டியா என்னப்பா கோபி உன் நண்பனுக்கு சொல்லுப்பா என ஜாலியாக அட்வைஸ் செய்திருந்தார்.

அணுஷ்காவுடன் காதலா: பாகுபலி, பாகுபலி 2 படத்தில் நடித்தபோதே பிரபாஸ் மற்றும் அனுஷ்காவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் இணைந்து மிர்ச்சி, பில்லா போன்ற படங்களில் ஆரம்பகாலத்தில் நடித்து வந்தனர். இதனால், இருவருக்கும் நல்ல நட்புறவு இருக்கிறது. நாங்க 2 பேரும் நல்ல ப்ரண்ட்ஸ் என விளக்கம் அளித்தனர். இதனிடையே, அனுஷ்காவும் திருமணம் செய்யாமல் இன்னும் முரட்டு சிங்கிள் பெண்ணாகவே வலம் வருகிறார். எனவே, இருவரும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றால் கிசுகிசுக்கள் வர தொடங்கின.

prabhas-marry-to-telengana-bussinessmans-daughter

பயம்: திருமணம் என்றால் ஏன் பிரபாஸ் பயப்படுகிறார் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். காரணம் அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் காதலித்து திருமணம் செய்துகொண்டாராம். திருமணத்திற்கு பிறகு நிம்மதியே இல்லாத வாழ்க்கையை இருவரும் வாழ்வதாக கூறி பிரிந்து சென்றுவிட்டனராம். இதனால், தனது நண்பருக்கு நடந்தது போல் தனக்கும் நடக்கும் என்ற காரணத்தினால் பிரபாஸ் திருமணம் செய்ய மறுப்பு தெரிவிப்பதாக அண்மையில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாது.

prabhas-marry-to-telengana-bussinessmans-daughter

திருமணம்?: நடிகர் பிரபாஸ் தற்போது ஸ்பிரிட், தி ராஜா சாப் மற்றும் சலார் 2 போன்ற படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். அவருக்கு 45 வயது நெருங்கியதால் அவரது வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சீக்கிரம் ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவெடுத்திருக்கின்றனர். இதற்கு பிரபாஸூம் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கல்யாணத்தை நடத்தி வைக்க பிரபாஸின் மாமா மனைவி படாதபாடு படுகிறாராம். சீக்கிரமே கால்கட்டு போட பிளான் பண்ணிவிட்டாராம். தெலங்கானாவில் பிரபல தொழிலதிபரின் மகளைத்தான் பிரபாஸ் திருமணம் செய்ய இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த செய்திகள் வெளியானதால் அவரது ரசிகர்கள் பிரபாஸிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

FAQs
பிரபாஸ் நடிப்பில் 1000 கோடி வசூல் செய்த முதல் படம் எது?

பாகுபலி

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X