Just In
- 2 hrs ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 2 hrs ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 4 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 5 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- Automobiles
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- News
ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இன்னொரு தேசிய விருது பார்சல்.. நடிகையர் திலகம் இயக்குநருடன் இணையும் பிரபாஸ்.. #Prabhas21!
ஹைதராபாத்: நடிகர் பிரபாஸின் 21வது படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற கேள்விக்கு சூப்பரான விடை கிடைத்துள்ளது.
தமிழில் நடிகையர் திலகம் என்றும் தெலுங்கில் மகாநடி என்ற தலைப்பிலும் வெளியான படத்தை இயக்கி தேசிய விருதுகளை அள்ளிய நாக் அஸ்வின் தான் பிரபாஸின் 21வது படத்தை இயக்குகிறார்.
தற்போது, வெளியாகியுள்ள அதன் அறிவிப்புகள், இந்தியளவில் #Prabhas21 என்ற ஹாஷ்டேக்கில் டிரெண்டாகி வருகிறது.
|
உலகளவில் மார்க்கெட்
எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் பிரபாஸுக்கு உலகளவில் மார்க்கெட்டை ஏற்படுத்தி கொடுத்துள்ளன. கடந்த ஆண்டு பிரபாஸ் நடிப்பில் 300 கோடி பட்ஜெட்டில் வெளியான சாஹோ படமும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
|
பெயரிடாத படம்
சாஹோ திரைப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் பிரபாஸ், இயக்குநர் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் தனது 20வது படத்தில் நடித்து வருகிறார். இன்னும் அந்த படத்தின் பெயர் மற்றும் விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், அடுத்த படம் குறித்த பிரம்மாண்ட அறிவிப்பு தற்போது வெளியாகி இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
|
400 கோடி பட்ஜெட்
இயக்குநர் சுஜித் இயக்கத்தில், பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சாஹோ படம் 300 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது. இந்நிலையில், பாகுபலியை போல வரலாற்று திரைப்படமாக உருவாக உள்ள 21வது படத்தின் பட்ஜெட் 400 கோடியாம்.

தேசிய விருது
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, கீர்த்தி சுரேஷ், விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான மகாநடி திரைப்படம் பலரது பாராட்டுக்களை மட்டுமின்றி, சிறந்த படம், சிறந்த நடிகை மற்றும் சிறந்த ஆடை வடிவமைப்பு என 3 தேசிய விருதுகளையும் தட்டிச் சென்றது.
|
50வது வருஷம்
பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ், சினிமா துறையில் 50 ஆண்டுகளை பிரபாஸ் படத்துடன் கொண்டாட உள்ளது. இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸின் 21வது படம் மிக பிரம்மாண்டமான வரலாற்று காவியமாக உருவாகும் என்ற அறிவிப்பையும் தயாரிப்பு நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படி ஒரு கனெக்ஷன்
மகாநடி படத்தைத் தொடர்ந்து, மீண்டும் வைஜெயந்தி மூவிஸ் பேனரிலேயே நாக் அஸ்வின் தனது அடுத்த படத்தை இயக்குகிறார். 50ம் ஆண்டு பொன் விழாவில் அடியெடுத்து வைக்க உள்ள வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அஸ்வினி தத்தின் மகள் பிரியங்கா தத்தைத் தான் நாக் அஸ்வின் திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
|
பாக்ஸ் ஆஃபிஸ்
பிரபாஸின் 21வது படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகி உள்ள நிலையில், டார்லிங் பிரபாஸ் ரசிகர்கள், பாகுபலி படத்தின் வசூல் சாதனையை முறியடிக்க, பிரபாஸால் மட்டுமே முடியும் என்றும், நிச்சயம் இந்த படம் அந்த படத்தின் வசூல் சாதனையை முறியடிக்கும் என்றும், ட்விட்டரில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.
|
என்ன கதை?
வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில், நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ் நடிக்கப் போகும் படத்தின் கதை என்னவாக இருக்கும் என ரசிகர்கள் பலவிதமான கெஸ்களை சமூக வலைதளத்தில் பறக்க விட்டு வருகின்றனர். பாகுபலி போன்று வரலாற்று படமாக இருக்கும் என்றும், இல்லை இல்லை, டைம் ட்ராவல் கதை தான் என்றும் கூறி வருகின்றனர்.