மருத்துவமனையில் இருந்து ஆசையை தெரிவித்த சிறுவன்: ஓடோடி வந்த பிரபாஸ்
ஹைதராபாத்: தன்னை பார்க்க விரும்பிய குட்டி ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் பிரபாஸ்.
பாகுபலி, பாகுபலி 2 படங்கள் வெளியான பிறகு பிரபாஸுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் கிடைத்துள்ளனர். பாகுபலி 2 படத்தை அடுத்து அவர் சாஹோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள மதன் என்ற சிறுவன் 'நான் பாகுபலியை பார்க்க விரும்புகிறேன்' என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தி நின்ற புகைப்படம் வெளியாகி வைரலானது.
அந்த புகைப்படத்தை பார்த்த பிரபாஸ் படப்பிடிப்பில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டு வந்து குட்டி ரசிகர் மதனை சந்தித்து பேசி அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்துதுள்ளார்.
மதனுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மதனின் பெற்றோரிடமும் பிரபாஸ் நெடுநேரம் பேசியுள்ளார்.
படத்தில் மட்டும் அல்ல நிஜத்திலும் பிரபாஸ் குட்டீஸ்களிடம் பாசமாகவே உள்ளார்.


Click it and Unblock the Notifications











