Prabhas: சீனியர் சீனியர் தான்.. சங்கராந்திக்கு எல்லா படமும் ஹிட் ஆகும்.. பிரபாஸின் பெருந்தன்மை!

ஹைதராபாத்: பாகுபலி, சலார், கல்கி என மெகா பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த நடிகர் பிரபாஸ் தனது 'தி ராஜா சாப்' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும் போது, "சீனியர் சீனியர் தான்" என பேசியது ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழர்கள் பொங்கல் கொண்டாடும் அதே நாளில் தெலுங்கு மக்கள் சங்கராந்தி பண்டிகையை கொண்டாடுகின்றனர். தமிழ் சினிமாவில் சீனியர் விஜய்யின் ஜன நாயகன் மற்றும் ஜூனியர் சிவகார்த்திகேயனின் படங்கள் மோதுவது போல அங்கேயும் பிரபாஸ் மற்றும் சிரஞ்சீவி படங்களின் கிளாஷ் நடக்கிறது.

Prabhas opens up about Sankaranti clash with Chiranjeevi

இந்நிலையில், பிரபாஸ், சீனியரான சிரஞ்சீவிக்கு தனது பட மேடையில் கொடுத்த மரியாதையை பார்த்து பல நடிகர்கள் இதை கற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறி வருகின்றனர்.

டார்லிங் பிரபாஸ்: ஆக்‌ஷன் ஹீரோவாகவே பாகுபலி படத்துக்குப் பிறகு மாறிய பிரபாஸ் டார்லிங் பிரபாஸாக ஜாலியான ஒரு படத்தை இந்த சங்கராந்திக்கு ரசிகர்களுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளார். ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ள 'தி ராஜா சாப்' திரைப்படம் ஜனவரி 9ம் தேதி விஜய்யின் ஜன நாயகன் படத்துடன் போட்டியாக வெளியாகிறது.

சிரஞ்சீவியுடன் போட்டி: வரும் சங்கராந்திக்கு பிரபாஸின் 'தி ராஜா சாப்' மற்றும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா நடித்துள்ள 'மன சங்கர வரபிரசாத் காரு' உள்ளிட்ட படங்கள் டோலிவுட்டில் நேரடி மோதலில் ஈடுபடுகிறது. இந்நிலையில், அதை போட்டியாக கருதாமல் பொங்கலுக்கு வரும் அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க வேண்டும் என்பதே தனது ஆசை என பிரபாஸ் பேசியுள்ளார்.

Prabhas opens up about Sankaranti clash with Chiranjeevi

சீனியர் சீனியர் தான்: தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் அ. வினோத் அதை மேலும், தூண்டும் விதமாக பேசியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இங்கே சிவகார்த்திகேயன் பராசக்தி இசை வெளியீட்டு விழாவில் என்ன பேசப் போகிறார் என்பதை காணவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், "சீனியர் சீனியர் தான்.. அவங்களுக்கு எப்போதுமே ரெஸ்பெக்ட் கொடுக்கணும், சங்கராந்திக்கு வரும் அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகம்" என பிரபாஸ் பேசியது பலரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது.

நன்றி சொல்லிட்டு போறவன் இல்லை: ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் திடீரென தவெக தலைவராக மாறி "நன்றி சொல்லிட்டு போறவன் இல்லை இந்த விஜய்.. நன்றிக்கடனை தீர்த்துட்டு போறவன்" என பேசியது, அவர் ரஜினிகாந்தை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார் என்கிற விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X