ரூ. 100 கோடிப்பு: ரஜினி, சல்மான், ஷாருக்கை முந்திவிட்டாரா பிரபாஸ்?
ஹைதராபாத்: சாஹோ படத்திற்காக பிரபாஸுக்கு ரூ. 100 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் நடித்துள்ள மெகா பட்ஜெட் படமான சாஹோ வரும் 30ம் தேதி ரிலீஸாக உள்ளது. முன்னதாக சாஹோ ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் தேதியை மாற்றினார்கள்.

சாஹோ படத்தின் ரிலீஸ் தேதி மாறியதை பார்த்து பல தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களின் வெளியீட்டு தேதியை தள்ளிப் போட்டுள்ளனர். இதை பார்த்த பிரபாஸ் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
சாஹோ பட ரிலீஸ் நெருங்கும் வேளையில் பிரபாஸின் சம்பளம் குறித்த பேச்சு தீயாக பரவியுள்ளது. அதாவது சாஹோ படத்திற்காக பிரபாஸுக்கு ரூ. 100 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

இந்த தகவல் உண்மை எனில் ரஜினி, சல்மான், ஷாருக்கான் ஆகியோரை முந்தி இந்தியாவின் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் என்கிற அந்தஸ்தை பெறுகிறார் பிரபாஸ். சம்பள விஷயம் குறித்து பிரபாஸோ, சாஹோ பட தயாரிப்பாளரோ விளக்கம் அளிக்கவில்லை.
சாஹோ படம் தெலுங்கு, இந்தி, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ரிலீஸாக உள்ளது. பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்கள் இந்தியா முழுவதும் பிரபலமானதால் சாஹோ படத்தை நான்கு மொழிகளில் வெளியிடுகிறார்கள்.

சாஹோ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூருக்கு ரூ. 7 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இது நம்ம நயன்தாரா, அனுஷ்கா வாங்கும் சம்பளத்தை விட அதிகம். ஆனால் பாலிவுட் நடிகைகள் தென்னிந்திய படங்களில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடவே சர்வ சாதாரணமாக ரூ. 2 கோடி கேட்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சாஹோ ரிலீஸான பிறகு பிரபாஸின் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. அவர் அமெரிக்காவை சேர்ந்த தொழில் அதிபரின் மகளை திருமணம் செய்யப் போவதாக பேச்சு கிளம்பியுள்ளது. இதனால் அனுஷ்கா ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் பிரபாஸ் அனுஷ்காவை திருமணம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தனர்.


Click it and Unblock the Notifications