Prabhas: ஆதிபுருஷ் படத்துடன் வெளியாகும் சலார் டீசர்... ட்ரோலை சமாளிக்க பிரபாஸின் மாஸ் ஐடியா!
ஹைதராபாத்: பாகுபலி படம் வெளியான பின்னர் பான் இந்தியா ஸ்டாராக வலம் வருகிறார் பிரபாஸ்.
அதனால், பிரபாஸின் படங்களுக்கு இந்தியா முழுவதும் பயங்கர எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில், அவர் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் ஜூன் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்துடன் சலார் டீசரையும் வெளியிட பிரபாஸ் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆதிபுருஷ் படத்துடன் வெளியாகும் சலார் டீசர்
தெலுங்கு ரசிகர்களின் டார்லிங் என கொண்டாடப்படும் பிரபாஸ், பாகுபலி படத்திற்குப் பின்னர் பான் இந்தியா ஸ்டாராக வலம் வருகிறார். பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் மெகா ஹிட் படங்களாக அமைந்தன. இதனால் பிரபாஸ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய படங்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது.
ஆனால், சாஹோ, ராதே ஷ்யாம் இரண்டு படங்களுமே படுதோல்வியடைந்தன. இதனால் ஆதிபுருஷ், சலார் படங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார் பிரபாஸ். ஆனால், ஆதிபுருஷ் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் கார்ட்டூன் படம் போல இருக்கிறது எனவும், கிராபிக்ஸ் காட்சிகள் படு மொக்கையாக இருப்பதாகவும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.
ராமாயணத்தின் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பிரபாஸுடன் கிருத்தி சனோன், சையிப் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முக்கியமாக சையிப் அலிகான் இந்தப் படத்தில் நடித்ததும் கடும் சர்ச்சையானது. இந்நிலையில், ஜூன் 16ம் தேதி வெளியாகும் ஆதிபுருஷ் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அதனை சமாளிக்க பிரபாஸ் செம்ம மாஸ்ஸான ஐடியா போட்டுள்ளாராம்.

அதன்படி ஆதிபுருஷ் வெளியாகும் திரையரங்குகளில் சலார் படத்தின் டீசரை வெளியிட பிரபாஸ் திட்டமிட்டுள்ளாராம். கேஜிஎஃப் திரைப்படம் மூலம் இந்திய சினிமாவையே மிரட்டிய பிரசாந்த் நீல் தான் சலார் படத்தையும் இயக்கியுள்ளார். இந்தப் படமும் கேஜிஎஃப் போல பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. தரமான ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள சலார் படத்தில் பிரபாஸுடன் பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன், ஸ்ரீயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சலார் திரைப்படம் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்போதே டீசரை வெளியிட்டால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைவிட முக்கியமாக ஆதிபுருஷ் ட்ரோல்கள் எல்லாம் சலார் டீசரில் ஓரங்கட்டப்படும் என்பதே பிரபாஸின் நம்பிக்கையாக உள்ளது. ஆதிபுருஷ் படத்துடன் சலார் டீசர் வெளியாகும் அப்டேட் விரைவில் அபிஸியலாக அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











